ஆப்பிரிக்க சவானா முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
ஆப்பிரிக்க சவானா முயல்
Lepus microtis
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
இனம்: L. microtis
இருசொற் பெயரீடு
Lepus microtis
ஹெயுக்லின்,1865
ஆப்பிரிக்க சவானா முயலின் பரவல்
வேறு பெயர்கள்
  • Lepus victoriae தாமஸ், 1893

ஆப்பிரிக்க சவானா முயல் (ஆங்கிலப்பெயர்: African Savanna Hare, உயிரியல் பெயர்: Lepus microtis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது சவானா புல்வெளிகள் மற்றும் சாகேல் ஆகிய ஆப்பிரிக்காவின் வேறுபட்ட பகுதிகள் மற்றும் வாழ்விடங்களை பூர்வீகமாகக் கொண்டது. இது அல்ஜீரியா, போட்ஸ்வானா, புருண்டி, சாட், காங்கோ மக்களாட்சி குடியரசு, எத்தியோப்பியா, காம்பியா, கினியா, கினி-பிசாவு, கென்யா, லிபியா, மாலி, மௌரிட்டானியா, மொராக்கோ, மொசாம்பிக், நமீபியா, நைஜர், ருவாண்டா, செனகல், சியரா லியோன், தென் ஆப்பிரிக்கா, சூடான், தான்சானியா, துனிசியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Lagomorph Specialist Group 1996. Lepus microtis. IUCN Red List of Threatened Species. Retrieved 31 July 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_சவானா_முயல்&oldid=3618654" இலிருந்து மீள்விக்கப்பட்டது