ஆப்கானிய பறக்கும் அணில்
ஆப்கானிய பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ரோடென்சியா |
குடும்பம்: | சியூரிடே |
பேரினம்: | ஈயோகுலோகோமைசு |
இனம்: | ஈயோகுலோகோமைசு பிம்பிரியேடசு |
துணையினம்: | ஈ. பி. பாபேரி |
மூவுறுப்புப் பெயர் | |
ஈயோகுலோகோமைசு பிம்பிரியேடசு பாபேரி (பிளைத், 1847) |
ஆப்கானிய பறக்கும் அணில் (Afghan flying squirrel), அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கூறிய அகணிய உயிரி ஆகும்.[1]
விளக்கம்[தொகு]
ஆப்கானித்தான் பறக்கும் அணில் அழிந்துவரும் இனமாக அச்சுறுத்தப்படுவதில்லை. ஏனெனில் அது பரவலாக காணப்படுகிறது. இதன் எண்ணிக்கை அதிகம். ஆப்கானித்தான் பறக்கும் அணிலை பாதிக்கும் ஒரே அச்சுறுத்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட மரம் வெட்டுதல், நவீனமயமாக்கல், உரோம வர்த்தகத்திற்காக வேட்டையாடுதல். இது தோராயமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரையிலான தலைமுறை காலத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்டுக்கு இரண்டு முறை 2 முதல் 4 குட்டிகளை ஈணும்.[2]
பரவல்[தொகு]
ஆப்கானித்தான் பறக்கும் அணில் மலைப்பகுதியில் ஊசியிலைக் காடுகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது. ஆப்கானித்தான் பறக்கும் அணில் பின்வரும் நாடுகளில் காணப்படுகிறது.[2]
- ஆப்கானித்தான்
- இந்தியா
- பாக்கித்தான்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Baillie, J. 1996. Hylopetes baberi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 29 July 2007.
- ↑ 2.0 2.1 "Eoglaucomys fimbriatus". International Union for Conservation of Nature and Natural Resources. 3 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு[தொகு]
- Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.