ஆன் போனி
ஆன் போனி | |
---|---|
சார்லஸ் ஜான்சனின் கடற்கொள்ளையர் என்ற புத்தகத்தின் 1725 டச்சு மொழிபெயர்ப்பிலிருந்து ஆன் போனி | |
பிறப்பு | அண். பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி கோர்க் நகரம் அருகில், அயர்லாந்து இராச்சியம் |
இறப்பு | அறியப்படவில்லை; கடைசியாக 1720 இல் வெளிப்பட்டார் |
கடற் கொள்ளை தொடர்பில் | |
வகை | கடற்கொள்ளை |
கூட்டு | காலிக்கோ ஜாக் |
இயங்கிய காலம் | ஆகஸ்ட் 1720 – அக்டோபர் 1720 |
செயற்பாட்டுக் களம் | கரிபியன் |
ஆன் போனி ( Anne Bonny ) (17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி - 28 நவம்பர் 1720க்குப் பிறகு காணாமல் போனார்), [1] சில சமயங்களில் ஆன் ஃபுல்ஃபோர்ட் எனவும் அறியப்படுகிறார். [2] கரிபியனில் செயல்பட்ட ஒரு ஐரியக் கடற்கொள்ளையர் மற்றும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட சில பெண் கடற்கொள்ளையர்களில் ஒருவர்.[3] கேப்டன் சார்லஸ் ஜான்சனின் 1724 ஆம் ஆண்டு புத்தகமான எ ஜெனரல் ஹிஸ்டரி ஆஃப் தி பைரேட்ஸ் புத்தகத்திலிருந்து இவரது வாழ்க்கையைப் பற்றி சிறிதளவு அறியப்படுகிறது
ஆன், அயர்லாந்தில் அறியப்படாத தேதியில் பிறந்தார்.[a] பின்னர் இலண்டனுக்கும் பின்னர் கரோலினா மாகாணத்திற்கும் சென்றார். 1718 ஆம் ஆண்டில், இவர் மாலுமி ஜேம்ஸ் போனியை மணந்தார். அவருடன் கடற்கொள்ளையர்களுக்கான சரணாலயமான பகாமாசிலுள்ள நாசாவு என்ற பகுதிக்குச் சென்றார். [4] அங்கு இவர் காலிகோ ஜாக் ராக்காம் என்பவனைச் சந்தித்து அவனது கொள்ளைக் கூட்டாளியாகவும் காதலியாகவும் ஆனார். அக்டோபர் 1720 இல் ராக்காம் மற்றும் மேரி ரீட் ஆகியோருடன் இவரும் கைது செய்யப்பட்டார். மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆனி மற்றும் மேரி ரீட் இருவரும் கர்ப்பமாக இருந்ததால் இவர்களின் மரணதண்டனை நிறுத்தப்பட்டது. மேரி ரீட் ஏப்ரல் 1721 இல் சிறையில் காய்ச்சலால் இறந்தார் ( பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் காரணமாக இருக்கலாம் ). ஆனால் ஆன் போனியின் கதி தெரியவில்லை.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஆன் போனியின் பிறந்த தேதி தெரியவில்லை.[5] இவர் அயர்லாந்தின் கார்க் கவுண்டியில் பிறந்ததாகக் கூறப்படுகிறது.[6] மேரி பிரென்னன் என்ற வேலைக்காரிக்கும் அவரது முதலாளி, வழக்கறிஞர் வில்லியம் கோர்மாக் ஆகியோருக்கு மகளாவார். ஆன் சட்டவிரோதமானவர் என்றாலும், கோர்மாக் இவரை தனது முறையான மகளாகக் காட்டிக் கொண்டார்.[7] இவரது வாழ்க்கையைப் பற்றிய அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் சமகால சான்றுகள் அரிதாகவே உள்ளன. கேப்டன் சார்லஸ் ஜான்சனின் 1724 ஆம் ஆண்டு புத்தகமான எ ஜெனரல் ஹிஸ்டரி ஆஃப் தி பைரேட்ஸ் புத்தகத்திலிருந்து இவரது வாழ்க்கையைப் பற்றி சிறிதளவு அறியப்படுகிறது.[8]
வில்லியம் கோர்மாக் முதலில் தனது மனைவியின் குடும்பத்தை விட்டு வெளியேற இலண்டனுக்கு குடிபெயர்ந்தார். மேலும் அவர் இவரை ஒரு பையனாக அலங்கரித்து "ஆண்டி" என்று அழைக்கத் தொடங்கினார்.[9] கார்மாக் பின்னர் கரோலினா மாகாணத்திற்கு ஆன் மற்றும் இவரது தாயார் மேரி பிரென்னனை அழைத்துச் சென்றார். ஆன் இளமையாக இருந்தபோது இவரது தாய் இறந்துவிட்டார்.
ஆன் ஏழை மாலுமியான ஜேம்ஸ் போனி என்ற கடற்கொள்ளையனை மணந்தார். இத்திருமணத்தை இவரது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.[10]
இதற்கு பழிவாங்கும் விதமாக ஆன் தனது தந்தையின் தோட்டத்திற்கு தீ வைத்ததாக ஒரு கதை உள்ளது, ஆனால் அதற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், 1714 மற்றும் 1718 க்கு இடையில், இவரும் ஜேம்ஸ் போனியும் நியூ பிராவிடன்ஸ் தீவில் உள்ள நச்சாவுக்கு குடிபெயர்ந்தனர். இது ஆங்கில கடற்கொள்ளையர்களுக்கான சரணாலயம் என்று அறியப்படுகிறது. அங்குள்ள பல குடிமக்கள் மன்னரின் மன்னிப்பைப் பெற்று அல்லது சட்டத்தை மீறி அங்கு தங்கினர். 1718 கோடையில் ஆளுநர் வூட்ஸ் ரோஜர்ஸ் ஜேம்ஸ் போனியை தகவல் அளிப்பவராக நியமித்தார் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் போனி அப்பகுதியில் உள்ள கடற்கொள்ளையர்களைப் பற்றி ஆளுநருக்கு தெரியப்படுத்தியதும் கடற்கொள்ளையர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். தனது கணவர் செய்த இந்தப் பணியை ஆன் விரும்பவில்லை.
ராக்காமுடன் சேர்தல்
[தொகு]பகாமாசில் இருந்தபோது, ஆன் மதுக்கடைகளில் கடற்கொள்ளையர்களை சந்திக்கத் தொடங்கினார். அங்கு இவர் ஜான் "காலிகோ ஜாக்" ராக்காமைச் சந்தித்தார். பின்னர் அவனுடைய காதலனானார். பின்னர் ராக்காமுடன் சேர்ந்து அவனது குழுவில் உறுப்பினரானார். இவர் கப்பலில் ஒரு ஆணாக மாறுவேடமிட்டு இருந்தார். இவர் கர்ப்பமாக இருப்பது [11] தெரியும் வரை இவர் ஒரு பெண் என்பதை ராக்காம் மற்றும் மேரி ரீட் மட்டுமே அறிந்திருந்தனர். ராக்காம் இவரை கியூபாவில் இறக்கினான். அங்கு இவருக்கு ஒரு மகன் பிறந்தான். பின்னர் மீண்டும் ராக்காமுடன் சேர்ந்து கடற்கொள்ளை வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[12] ராக்காமும் இரண்டு பெண்களும் ஒரு புதிய குழுவை நியமித்தனர். அவர்களது குழுவினர் ஜமைக்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆண்டுகள் கழித்தனர். [13] ஆன் போனி ஆண்களுடன் இணைந்து கொள்ளையில் பங்கேற்றார். ஆளுநர் ரோஜர்ஸ் தி பாஸ்டன் நியூஸ்-லெட்டரில் வெளியிடப்பட்ட "கடற்கொள்ளையர்களை தேடுதல்" என்ற சுற்றறிக்கையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. [14]
கைது மற்றும் சிறை
[தொகு]அக்டோபர் 1720 இல், ஜமைக்காவின் ஆளுநரான நிக்கோலஸ் லாவ்ஸின் ஆணையின் கீழ் ஜொனாதன் பார்னெட் தலைமையிலான ஒரு குழு மூலம் ராக்காமும் அவனது குழுவினரும் தாக்கப்பட்டனர். ராக்காமின் பெரும்பாலான கடற்கொள்ளையர்கள் குடிபோதையில் இருந்ததால் அவர்களால் எதிர்ப்பை வெளிபடுத்த முடியவில்லை. அவர்கள் பிடிக்கப்பட்டு ஜமைக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு ஆளுநர் லாவ்ஸ் தீர்ப்பளித்தார். [15][7]
மேரி ரீட் மற்றும் ஆன் இருவரும் " தாங்கள் கருவுற்றிருந்ததால்" மன்னிப்பைக் கோரினர், [16] நீதிமன்றம் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை மரணதண்டனையை நிறுத்திவைத்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட காய்ச்சலால் மேரி ரீட் சிறையிலேயே இறந்தார். அவர் ஜமைக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் 28 ஏப்ரல் 1721 அன்று அடக்கம் செய்யப்பட்டதாக பதிவு செய்யபட்டுள்ளது. [17]
இறப்பு
[தொகு]ஆன் போனியின் விடுதலை குறித்து எந்த பதிவும் இல்லை. [18] குடும்பத் தலையீட்டால் ஆன் விடுவிக்கப்பட்டு, அமெரிக்கக் காலனிகளுக்குச் சென்று, 1780களில் இறந்தார் என்ற ஒரு கூற்றும் உள்ளது. [19] ஒரு எசுப்பானிய கல்லறைப் பதிவேட்டில் 29 டிசம்பர் 1733 அன்று "ஆன் போனி" அடக்கம் செய்யப்பட்டார் என்ற ஒரு தகவல் உள்ளது.[20]
கேப்டன் சார்லஸ் ஜான்சன் 1724 இல் வெளியிடப்பட்ட ராபரிஸ் அன்ட் மர்டர்ஸ் என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "அவள் சிறைச்சாலையிலேயே இருந்தாள்: ஆனால் அவளுக்கு என்ன ஆனது என்பது பற்றி எங்களால் சொல்ல முடியாது; அவள் தூக்கிலிடப்படவில்லை என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். [21]
சிலை
[தொகு]2020 ஆம் ஆண்டில், இலண்டனில் உள்ள வாப்பிங்கில் உள்ள எக்ஸிகியூஷன் டாக்கில் ஆன் போனி மற்றும் மேரி ரீட் ஆகிய இருவரின் சிலைகளும் திறக்கப்பட்டது. தெற்கு டெவோனில் உள்ள பர்க் தீவில் சிலைகள் நிரந்தரமாக வைக்கப்பட வேண்டும் என்று முதலில் திட்டமிடப்பட்டது. [22] ஆனால் திருட்டுத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகார்களுக்குப் பிறகு இந்த முடிவு திரும்பப் பெறப்பட்டன. சிலைகள் இறுதியில் லூயிஸ் கால்பந்து சங்கத்தில் வைக்கப்பட்டது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Commonly cited dates include 1690, 1697, 1698, and 1702. All sources on date of birth were written centuries after Bonny's trial and cannot be collaborated.
- ↑ Baldwin, Robert. "The Tryals Of Captain John Rackham and Other Pirates". Internet Archives. 1721. பார்க்கப்பட்ட நாள் 22 October 2023.
- ↑ The Boston Gazette 1720 October 17 The Documentary Record பரணிடப்பட்டது 25 செப்டெம்பர் 2023 at the வந்தவழி இயந்திரம்,
- ↑ "Anne Bonny and Famous Female Pirates". www.annebonnypirate.com (in ஆங்கிலம்). Archived from the original on 4 March 2018. பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
- ↑ "Anne Bonny | Biography & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Archived from the original on 4 December 2020. பார்க்கப்பட்ட நாள் 17 February 2022.
- ↑ Baldwin, Robert. "The Tryals Of Captain John Rackham and Other Pirates". Internet Archives. 1721, The trial does not give an age, and calls her a spinster in one instance. This could theoretically give an age range, but proof of her pregnancy is not assured and thus cannot be trusted. பார்க்கப்பட்ட நாள் 22 October 2023.
- ↑ "Anne Bonny – Famous Female Pirate". www.famous-pirates.com. Archived from the original on 12 November 2017. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
- ↑ 7.0 7.1 Legendary Pirates The Life and Legacy of Anne Bonny . Charles River Editors, 2018.
- ↑ Bartelme, Tony (21 November 2018). "The true and false stories of Anne Bonny, pirate woman of the Caribbean". The Post and Courier. Archived from the original on 11 November 2020. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
- ↑ Joan., Druett (2005). She captains : heroines and hellions of the sea. New York: Barnes & Noble Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-6691-6. இணையக் கணினி நூலக மைய எண் 70236194.
- ↑ Johnson, Charles (14 May 1724). The General History of Pyrates. Ch. Rivington, J. Lacy, and J. Stone.
- ↑ Johnson, Charles (14 May 1724). The General History of Pyrates. Ch. Rivington, J. Lacy, and J. Stone.Johnson, Charles (14 May 1724). The General History of Pyrates. Ch. Rivington, J. Lacy, and J. Stone.
- ↑ Druett, Joan (2000). She Captains: Heroines and Hellions of the Sea. New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-85690-5.
- ↑ Canfield, Rob (2001). "Something's Mizzen: Anne Bonny, Mary Read, "Polly", and Female Counter-Roles on the Imperialist Stage". South Atlantic Review: 50.
- ↑ Woodard, Colin. The Republic of Pirates. Harcourt, Inc. pp. 139, 316–318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-603462-3. Archived from the original on 2020-01-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
{{cite book}}
: CS1 maint: bot: original URL status unknown (link)Woodard, Colin (2007). . Harcourt, Inc. pp. 139, 316–318. ISBN 978-0-15-603462-3. Archived from the original on 4 January 2020. Retrieved 18 June 2020. - ↑ Zettle, LuAnn. "Anne Bonny The Last Pirate". Archived from the original on 22 May 2019.
- ↑ Yolen (1995). The Ballad of the Pirate Queens. pp. 23–24.
- ↑ Bartleme, Tony (28 November 2020). "A 22-year-old YouTuber may have solved Anne Bonny pirate mystery 300 years after trial". The Post and Courier. Archived from the original on 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
- ↑ Carmichael, Sherman. Forgotten Tales of South Carolina. The History Press.
- ↑ Fictum, David (8 May 2016). "Anne Bonny and Mary Read: Female Pirates and Maritime Women". Colonies, Ships, and Pirates. 8 May 2016. Archived from the original on 14 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
- ↑ Bartleme, Tony (28 November 2020). "A 22-year-old YouTuber may have solved Anne Bonny pirate mystery 300 years after trial". The Post and Courier. Archived from the original on 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
- ↑ Captain Charles Johnson, A General History of the Robberies and Murders of the most notorious Pyrates, Chapter 8,, retrieved 21 September 2017 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60949-232-8
- ↑ "Female pirate lovers whose story was ignored by male historians immortalised with statue". The Independent. 18 November 2020. Archived from the original on 7 May 2022.
வெளி இணைப்புகள்
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி