மேரி ரீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி “மார்க்” ரீட்
ஒரு கடற்கொள்ளையரை மேரி ரீட் (வலது) கொல்வதாக 1842 ஆம் ஆண்டு ஓவியம்
பிறப்புசுமார் 1680–1695
இங்கிலாந்து இராச்சியம்
இறப்பு28 ஏப்ரல் 1721 (வயது 26–41)
போர்ட் ராயல், ஜமைக்கா குடியேற்றம்
கல்லறைபுனித கேத்தரின் தேவாலயக் கல்லறை, ஜமேக்கா
கடற் கொள்ளை தொடர்பில்
வகைகடல் கொள்ளை
கூட்டுஆலந்தில் ஆங்கிலேயருடன் இணைந்த காலாட்படை மற்றும் குதிரைப்படை
இயங்கிய காலம்அண். 1708–1721
செயற்பாட்டுக் களம்கரிபியன்

மேரி ரீட் ( Mary Read ) ( பிறப்பு: தெரியாது - 28 ஏப்ரல் 1721), கற்பனையாக [1] மார்க் ரீட் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு ஆங்கிலக் கடற்கொள்ளைக்காரி ஆவார். இவரைப் பற்றி மிகக் குறைவான ஆவணங்களே உள்ளன. இவரும் ஆன் போனியும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பிரபலமான பெண் கடற்கொள்ளையர்களாக இருந்தனர். மேலும் “கடற்கொள்ளையின் பொற்காலம்” என அறியப்பட்ட காலத்தில் கடற்கொள்ளைக்கு தண்டனை பெற்றதாக அறியப்பட்ட சில பெண்களில் இவரும் ஒருவர்.

மேரி ரீட் 1680 மற்றும் 1693 க்கு இடையில் இங்கிலாந்தில் பிறந்தார். லோர் வாரிசுப் பணத்தைப் பெறுவதற்காக முதலில் தனது தாயின் வற்புறுத்தலின் பேரிலும், பின்னர் பிரித்தானிய இராணுவத்தில் சேர்வதற்காகவும் தனது இளம் வயதிலேயே இவர் ஒரு ஆணுக்குரிய உடை அணியத் தொடங்கினார். [2] பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார். தனது கணவர் இறந்தவுடன் 1715 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றார். சுமார் 1720 ஆம் ஆண்டில், இவர் கடற்கொளாளையரான ஜாக் ராக்காமைச் சந்தித்து அவரது குழுவினருடன் சேர்ந்தார். இவருடன் ஆன் போனியும் ஆணாக உடை அணிந்து கடற்கொளையில் ஈடுபட்டார். இவர்கள் மூவரும் குறுகிய காலமே சேர்ந்து இருந்தனர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆங்கில மாலுமிக்கும் அவரது மனைவிக்கும் மகளாகப் பிறந்தார்.[3] 13 வயதில், ஒரு பையனாக உடையணிந்து, மேரி ரீட் ஒரு செல்வந்தரின் வீட்டில் வேலை பார்த்தார்.[4] பின்னர் கப்பலில் வேலை கிடைத்தது.[5] பின்னர் பிரித்தானிய இராணுவத்தில் குதிரை படைப்பிரிவில் சேர்ந்தார். [6] இது பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக டச்சுப் படைகளுடனான போரில் ஒரு ஆணாக வேடமணிந்து போரிட்டார். படையில் பணிபுரிந்த ஒரு பிளம்மியச் சிப்பாயை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தனது கணவரின் சிறுவயது மரணத்திற்குப் பிறகு, மேரி ரீட் ஆண் வேடமிட்டு நெதர்லாந்து இராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்தும் வெளியேறி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் கப்பலில் ஏறினார்.[7] இவர் ஏறிய கப்பலில் கடற்கொள்ளையர் கூட்டமும் இருந்தது. இவர் ஆணாக மாறுவேடமிட்டு இருப்பது இவருக்கு உதவியது.

கடற்கொள்ளை[தொகு]

மேரி ரீடின் ஒரு சித்தரிப்பு
சார்லஸ் ஜான்சனின் கடற்கொள்ளையர் என்ற புத்தகத்தின் 1725 டச்சு மொழிபெயர்ப்பிலிருந்து ஆன் போனி

மேரி ரீடின் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. இவர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். 1720 இல் கடற்கொள்ளையரான " காலிகோ ஜாக் " ராக்காம் மற்றும் அவரது துணைவியார் ஆன் போனி ஆகியோருடன் சேர்ந்தார். இருவரும் இவரை ஒரு ஆண் என்றே நம்பினர். 22 ஆகஸ்ட் 1720 அன்று, மூவரும் நாசாவுவில் உள்ள துறைமுகத்திலிருந்து வில்லியம் என்ற ஆயுதமேந்திய சுலூப்பைத் திருடினர்.[8][9][10] மேரி ரீட் மற்றும் ஆன் போனி போன்ற பெண் கடற்கொள்ளையர்கள் ஆண் ஆதிக்க சூழலில் தங்கள் பாலினத்தை எவ்வாறு மறைத்தார்கள் என்பது அறிஞர்களுக்கு நிச்சயமற்றது.[11] இருப்பினும், சில அறிஞர்கள், பெண் கடற்கொள்ளையர்கள் ப்ரீச்களை அணிவது அவர்களின் அடையாளத்தை மறைக்கும் ஒரு முறையாக இருக்கலாம் அல்லது மற்ற மாலுமிகளிடையே கப்பலில் தங்கள் பணியிடத்தை உறுதிப்படுத்தும் நடைமுறை ஆடையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

கைது மற்றும் சிறை[தொகு]

அக்டோபர் 1720 இல், ஜமேக்காவின் ஆளுநரான நிக்கோலஸ் லாவ்ஸின் ஆணையின் கீழ் ஜொனாதன் பார்னெட் தலைமையிலான ஒரு குழு மூலம் ராக்காமும் அவனது குழுவினரும் தாக்கப்பட்டனர்.[12] ராக்காமின் பெரும்பாலான கடற்கொள்ளையர்கள் குடிபோதையில் இருந்ததால் அவர்களால் எதிர்ப்பை வெளிபடுத்த முடியவில்லை. அவர்கள் பிடிக்கப்பட்டு ஜமைக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு ஆளுநர் லாவ்ஸ் தீர்ப்பளித்தார்.[13][14]

மேரி ரீட் மற்றும் ஆன் இருவரும் " தாங்கள் கருவுற்றிருந்ததால்" மன்னிப்பைக் கோரினர், [15] நீதிமன்றம் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை மரணதண்டனையை நிறுத்திவைத்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட காய்ச்சலால் மேரி ரீட் சிறையிலேயே இறந்தார். அவர் ஜமைக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் 28 ஏப்ரல் 1721 அன்று அடக்கம் செய்யப்பட்டதாக பதிவு செய்யபட்டுள்ளது. [16]

மேற்கோள்கள்[தொகு]

  1. Carlova, John. Mistress of the Seas. New York: Citadel Press, 1964
  2. https://worldcat.org/en/title/225292570
  3. Cordingly, David (2007). Seafaring women : adventures of pirate queens, female stowaways, and sailors' wives (2007 Random House Trade paperback ). New York: Random House Trade Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780375758720. இணையக் கணினி நூலக மையம்:140617965. 
  4. Cordingly, David (1996). Under the Black Flag: The Romance and the Reality of Life Among the Pirates. New York: Random House. பக். 61. https://archive.org/details/underblackflagro00cord_0. 
  5. Cordingly, David (1996). Under the Black Flag: The Romance and the Reality of Life Among the Pirates. New York: Random House. https://archive.org/details/underblackflagro00cord_0. Cordingly, David (1996). Under the Black Flag: The Romance and the Reality of Life Among the Pirates. New York: Random House. p. 61.
  6. Defoe, Daniel, and Charles Johnson. A General History of Pyrates . Printed by J. Watts ..., 1725.
  7. Druett, Joan (2005). She captains : heroines and hellions of the sea. New York: Barnes & Noble Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0760766916. இணையக் கணினி நூலக மையம்:70236194. https://archive.org/details/unset0000unse_f5v2. 
  8. Rogers, Woodes (10 October 1720). "A proclamation". The Boston Gazette. 
  9. Woodard, Colin. "Mary Read Biography". Archived from the original on 4 January 2020. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
  10. Cordingly, David (2006). Under the Black Flag. New York: Random House. பக். 57–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0812977226. https://archive.org/details/underblackflagro00cord_1/page/57. 
  11. O'Driscoll, Sally (2012). "The Pirate's Breasts: Criminal Women and the Meanings of the Body". The Eighteenth Century 53 (3): 357–379. doi:10.1353/ecy.2012.0024. http://www.jstor.org/stable/23365017. 
  12. Pallardy, Richard. "Anne Bonny". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.
  13. Zettle, LuAnn. "Anne Bonny The Last Pirate". Archived from the original on 22 May 2019.
  14. Legendary Pirates The Life and Legacy of Anne Bonny . Charles River Editors, 2018.
  15. Yolen (1995). The Ballad of the Pirate Queens. பக். 23–24. https://archive.org/details/balladofpiratequ0000yole. 
  16. Bartleme, Tony (28 November 2020). "A 22-year-old YouTuber may have solved Anne Bonny pirate mystery 300 years after trial". The Post and Courier. Archived from the original on 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ரீட்&oldid=3937288" இலிருந்து மீள்விக்கப்பட்டது