உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்னா நிக்கோல் இசுமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா நிக்கோல் இசுமித்
2005இல் அன்னா
பிறப்புவிக்கி லின் ஹோஹன்
(1967-11-28)நவம்பர் 28, 1967
ஹியூஸ்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புபெப்ரவரி 8, 2007(2007-02-08) (அகவை 39)
ஹாலிவுட், புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்பிற்கான
காரணம்
அளவுக்கு அதிகமான போதைப் பொருள்
பணி
  • வடிவழகி
  • நடிகர்
  • தொலைக்காட்சி ஆளுமை
செயற்பாட்டுக்
காலம்
1992–2007
வாழ்க்கைத்
துணை
  • பில்லி வைன் இசுமித்
    (தி. 1985; ம.மு. 1993)
  • ஜே. கோவர்ட் மார்ஷல்
    (தி. 1994; இற. 1995)
பிள்ளைகள்2

விக்கி லின் மார்ஷல் (என்கிற ஹோஹன், நவம்பர் 28,1967-பிப்ரவரி 8,2007) தொழில் ரீதியாக அன்னா நிக்கோல் இசுமித் என்று அழைக்கப்படும் இவர் ஓர் அமெரிக்க வடிவழகியும், நடிகையும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார்.[1] அன்னா இசுமித் மே 1992 இல் பிளேபாய் பத்திரிகையின் மையப் பக்கத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1993 ஆம் ஆண்டின் பிளேமேட் என்ற பட்டத்தைப் பெற்றார். பின்னர் கியூஸ், எச் அண்ட் எம், லேன் பிரையன்ட், கோனெய்ர் மற்றும் ஹீதரெட் உள்ளிட்ட ஆடை அலங்கார நிறுவனங்களுக்கு விளம்பரமாகத் தோன்றினார்.

இசுமித் 1984 இல் உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறி, 1985 இல் திருமணம் செய்து கொண்டார், 1993 இல் விவாகரத்து செய்தார். 1994 ஆம் ஆண்டில், 89 வயதான பில்லியனர் ஜே. ஹோவர்ட் மார்ஷலுடனான இவரது இரண்டாவது திருமணம் மார்ஷலின் பணத்திற்காக அவரைத் திருமணம் செய்து கொண்டதாக ஊகங்கள் எழுந்தன. அதை அன்னா மறுத்தார். 1995இல் மார்ஷல் இறந்ததைத் தொடர்ந்து, அன்னா அவரது நிலங்களின் மீதான தனது பங்கு குறித்து நீதிமன்றத்தை நாடினார். இவரது வழக்குகள் வரின் வழக்கு மார்ஷல் வி. மார்ஷல் , அமெரிக்க உச்ச நீதிமன்ற சட்ட அதிகாரத்தின் கேள்விக்கு உள்ளானது. குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமான மருந்துகளை எடுத்துக் கொண்டதன் விளைவாக, பிப்ரவரி 2007 இல் புளோரிடாவின் ஹாலிவுட்டில்தனது 39 வயதில் இறந்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

விக்கி ஸ்மித் என்ற பெயரில், குறைந்த அளவுடைய ஒரு உடையை அணிந்து, பிளேபாயின் 1992ஆம் ஆண்டின் மார்ச் பதிப்பின் முன்பக்கச் செய்தியில் தோன்றுவதற்கு ஹக் ஹென்ஃபரால் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிறகு இவரது தொழில் முன்னேற்றம் பெற்றது.[2] இவரின் புகைப்படங்கள் இசுடீபன் வேடா என்பவரால் உருவாக்கப்பட்டது. அன்னா இசுமித் தான் “அடுத்த மர்லின் மன்றோவாகத்” மாறத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.[3] ஸ்மித் பிளேபாய் இதழில் இடம்பெற்ற புகழ் வாய்ந்த ஒருவராக ஆனபோது செல்வாக்கு மிக்கவரானார்.[4] 1993 ஆம் ஆண்டில் பிளேமேட் ஆப் தி இயர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நேர்த்தில் தனது பெயரை அன்னா இசுமித் என மாற்றிக் கொண்டார்.[5]

2003 இல்அன்னா இசுமித்

சொந்த வாழ்க்கை

[தொகு]

மெக்ஸியாவில் உள்ள ஜிம்சின் க்ரிஸ்பி ஃப்ரைட் சிக்கன் உணவகத்தில் பணிபுரிந்து வந்த சமையல்காரரான பில்லி வெய்ன் இசுமித் என்பவரைச் சந்தித்து ஏப்ரல் 4,1985 அன்று திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 16 வயதாக இருந்தபோது அன்னாவிற்கு 17 வயது.[6] இவர்களுக்கு ஜனவரி 22,1986 அன்று டேனியல் வெய்ன் என்ற ஒரு மகன் பிறந்தார். அன்னாவும் அவரது கணவரும் அடுத்த ஆண்டு பிரிந்தனர். 1993 இல் விவாகரத்து செய்தனர்.[7] 1994ஆம் ஆண்டு ஜூன் 27 இல், 26 வயதான அன்னா இசுமித் 89 வயதான மார்ஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது மார்ஷலின் பணத்திற்காக அவரைத் திருமணம் செய்து கொண்டதாக மிகப் பெரிய வதந்தியைப் பரப்பியது.[8] இருந்தபோதும் இதை இசுமித் மறுத்தார். மார்ஷலுடனான பதின்மூன்று மாத திருமணத்திற்குப் பிறகு, 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 இல் ஹவுஸ்டனில் மார்ஷல் இறந்தார்.

இறப்பு

[தொகு]

பிப்ரவரி 8,2007 அன்று, புளோரிடாவின் ஹாலிவுட்டில் உள்ள செமினோல் ஹார்ட் ராக் ஹோட்டல் & கேசினோ உள்ள தனது அறையில் அதிக போதை மருந்து உட்கொண்ட காரணத்தால் தனது 39 வயதில் இறந்தார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Interview with Anna Nicole Smith". CNN. May 29, 2002. http://transcripts.cnn.com/TRANSCRIPTS/0205/29/lkl.00.html. 
  2. "Anna Nicole Smith's Playboy Covers". cbs2chicago.com. Archived from the original on 2009-06-03. Retrieved 14 பெப்பிரவரி 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Anna Nicole Smith". Daily Telegraph. 10 பிப்ரவரி 2007 இம் மூலத்தில் இருந்து 2008-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080424093637/http://www.telegraph.co.uk/news/main.jhtml?view=DETAILS&grid=&xml=%2Fnews%2F2007%2F02%2F10%2Fdb1002.xml. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2007. 
  4. "ஆன்னா நிக்கோல் ஸ்மித் – குறிப்பு, சமீபத்திய செய்திகள் மற்றும் தொடர்பான கட்டுரைகள்". Archived from the original on 2006-11-11. Retrieved 2006-11-11.
  5. {Cite web|url=http://patidubroff.com/covers/german-marie-claire-anna-nicole-smith.html%7Ctitle=German Marie Claire: Anna Nicole Smith | Pati PREMA Dubroff|date=October 2, 1994|language=en-US|archive-url=https://web.archive.org/web/20190325162010/http://patidubroff.com/covers/german-marie-claire-anna-nicole-smith.html%7Carchive-date=March 25, 2019|access-date=March 25, 2019}}
  6. "ABC 20/20 Tragic Beauty: Anna Nicole Smith". ஐ. எம். டி. பி இணையத்தளம். February 5, 2021. Archived from the original on August 13, 2022. Retrieved August 12, 2022.
  7. Kever, Jeannie; Feldman, Claudia (February 9, 2007). "Anna Nicole Smith's life, and death, is a tabloid tale" (PDF). Houston Chronicle. Archived from the original (PDF) on June 24, 2021. Retrieved July 21, 2021.
  8. "Fame and Infamy Surround Anna Nicole Smith". ABC News. 2005-11-17. http://abcnews.go.com/Primetime/story?id=1320909. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2007. 
  9. Kantor, Wendy G.; Breuer, Howard (February 8, 2007). "Anna Nicole Smith Dead". People. Archived from the original on January 25, 2021. Retrieved December 12, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anna Nicole Smith
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

</nowiki>

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்னா_நிக்கோல்_இசுமித்&oldid=4228523" இலிருந்து மீள்விக்கப்பட்டது