பிறப்புச் சான்றிதழ்
பிறப்புச் சான்றிதழ் (Birth certificate), ஒரு குழந்தையின் பிறப்பைப் பதியும் முக்கிய ஆவணம் ஆகும். இச்சான்றிதழில் பின்வரும் விவரங்கள் இருக்கக்கூடும்:
- இயற்பெயர்
- பிறந்த தேதி, நேரம்
- குழந்தையின் பாலினம்
- பிறந்த இடம்
- பெற்றோர் பெயர்கள்
- பெற்றோரின் வேலை.
- பிறப்பு எடை, உயரம்.
- பிறப்பைத் தெரியப்படுத்துபவரின் பெயர்.
- பதிவு செய்த தேதி
- பிறப்புப் பதிவு எண் அல்லது கோப்பு எண்
பிறப்பைப் பதிவது பல நாடுகளில் சட்டப்படி கட்டாயமான ஒன்றாகும். பிறப்புச் சான்றிதழ் அரசு அலுவலகம் ஒன்றில் வைத்திருக்கப்படும். பின்னர், அக்குழந்தையோ அதன் பெற்றோர்களோ அதன் படியைப் பெற்றுக் கொள்ள இயலும். பள்ளியில் சேர்க்க, கடவுச்சீட்டு பெற என்று பல இடங்களில் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது.
இந்தியாவில், உள்ளூராட்சி அமைப்புகள் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குகின்றன.