ஆதிபராசக்தி சித்தர் பீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருவறை அம்மனைப் பூஜிக்கும் பங்காரு அடிகளார்

ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்னையில் இருந்து 72 கிமீ தொலைவில் உள்ள மேல்மருவத்தூர் எனும் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலிலேயே பங்காரு அடிகளார் அன்னை அருளைப்பெற்று ஆன்மீகத்தைப் பரப்புவதாகக் கூறப்படுகின்றது.

வரலாறு[தொகு]

1960களில் தற்போது பெரிய கோவில் இருக்கும் இடத்தில் ஒரு வேம்பு மட்டுமே இருந்தது. வழமையாக வேம்பில் இருந்து வடியும் பால் கசப்பான சுவையுடையது. ஆயினும் இந்த வேம்பில் இருந்து வடியும் பால் இனிப்பாக இருந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் இந்தப்பாலின் மூலம் அக் கிராமத்தவர் சில பிணிகளைத் தீர்த்ததாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1966 இல் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக இந்த வேம்பு சாய்ந்தது. சாய்ந்த வேம்பின் அடியில் ஒரு சுயம்பு காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த சுயம்பைக் கண்ட அவ்வூர் மக்கள் அதைச் சுற்றி ஒரு சிறிய குடில் அமைத்து அந்த சுயம்பை வழிபடத்தொடங்கினர். நவம்பர் 25, 1977 வரை இந்த சுயம்புவே மக்களால் வணங்கப்பட்டு வந்தது. ஆயினும் நவம்பர் 25, 1977 இல் ஆதிபராசக்தியின் சிலை ஒன்று பிரதிக்ஜை செய்யப்பட்டது.

மேலும் சித்தவனம் என மச்சபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசமே தற்போதைய ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் என்றும் இவ்வாலயத்தை வழிபடும் பக்தர்கள் மத்தியில் ஒரு ஐதீகம் நிலவுகின்றது. அதாவது இங்கே ஒரு சக்தி மிக்க பெண் சித்தர் உறைவதாகவும் அந்தப் பெருமாட்டியே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இந்தப் பூமியில் சுமார் 21 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து சூக்சும உடலுடன் வாழ்வதாக இவ்வாலயத்தின் பக்தர்கள் கருதுகின்றனர். இக்காரணத்தாலேயே இக்கோயில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்று அழைக்கப்படுகின்றது.

வழிபாட்டு முறைகள்[தொகு]

இந்து சமய ஆகம முறைப்படி பிராமணர்கள் அல்லது குருக்கள் மட்டுமே கருவறையினுள் புகுந்து இறைவனின் சிலைக்கு பூசைகள் செய்வது வழக்கம். ஆயினும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பக்தர்கள் யாரும் கருவறையினுள் சென்று ஆதிபராசக்தியின் மூல விக்கிரகத்தை பூஜிக்க அதாவது தொட்டு அர்ச்சனை, அபிசேகம் செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது. மேலும் சாதி, சமயம், பால் போன்ற காரணங்களைக் காட்டி யாரும் மூலக் கருவறையினுள் செல்வதை தடுக்கப்படுவதில்லை.

இதைவிட இங்கு பூசைகளில் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் வழமையான சமஸ்கிருதத்தில் அமையாமல் எளிய தமிழில் அமைந்துள்ளமை சிறப்பியல்பாகும்.