ஆதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதன் (About this soundஒலிப்பு ) என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் சங்ககாலத்தில் வாழ்ந்தனர்.

ஆதன் எழினி,
ஆதன் ஓரி,
செல்வக்கடுங்கோ வாழியாதன்,
உதியஞ்சேரலாதன்

ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆதனார் – அகம்பன் மாலாதனார்
ஆதனார் – கருங்குழலாதனார்
ஆதனார் - குண்டுகட் பாலியாதனார்

என்னும் பெயர்கொண்ட புலவர்கள்.

தமிழில் ஆதன் என்னும் சொல் பசுக்களை உடைய இடையரையும், காற்றையும் விண்ணையும் உணர்த்தும்.

கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊர் பெயர் ஆதனூர். இது மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததால் ஆதனூர் என பெயர் பெற்றது.

சேர அரசர்கள் வானவன், விண்ணவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். சேரநாடு உயர்ந்த மலைப்பகுதிகளைக் கொண்டது. இந்த உயர்வைக் கருத்தில் கொண்டு இந்தப் பெயர்கள் தோன்றின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதன்&oldid=2538998" இருந்து மீள்விக்கப்பட்டது