ஆதன் எழினி
Appearance
ஆதன் எழினி செல்லியின் அரசன்.
ஆதன் என்னும் பெயர் பூண்ட பெருமக்கள் சங்ககாலத்தில் வாழ்ந்தனர்.
சங்ககாலத்துச் செல்லூர் செல்லி எனவும் வழங்கப்பட்டது.
செல்லிக் கோமான் எனப் போற்றப்படும் ஆதன் எழினியின் மார்பில் மார்பில் யானை குத்தியது. அதனால் அவனுக்கு ஒன்றும் நேரவில்லை. குத்திய யானைதான் துன்ப்பபட வேண்டியதாயிற்று என ஐயூர் முடவனார் அகநானூறு பாடல் 216 இல் ஆதன் எழினியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.