ஆசுலி பார்ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசுலி பார்ட்டி
Ashleigh Barty
Sydney International WTA Players Cruise (31974227527) (cropped).jpg
நாடு  ஆத்திரேலியா
வசிப்பிடம் இப்சுவிச், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
பிறந்த திகதி 24 ஏப்ரல் 1996 (1996-04-24) (அகவை 25)[1]
பிறந்த இடம் இப்சுவிச், குயின்சுலாந்து, ஆத்திரேலியா
உயரம் 1.66 மீ
நிறை
தொழில்ரீதியாக விளையாடியது 2010–2014
2016–
விளையாட்டுகள் வலக்கை
வெற்றிப் பணம் $18,798,304
  • 23-வது அனைத்து ஈட்டம்[2]
ஒற்றையர்
சாதனை: 287–100 (74.16%)
பெற்ற பட்டங்கள்: 12
அதி கூடிய தரவரிசை: இல. 1 (24 சூன் 2019)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதி (2020)
பிரெஞ்சு ஓப்பன் வெ (2019)
விம்பிள்டன் வெ (2021)
அமெரிக்க ஓப்பன் 4-வது (2018, 2019)
இரட்டையர்
சாதனைகள்: 195–63 (75.58%)
பெற்ற பட்டங்கள்: 11
அதிகூடிய தரவரிசை: இல. 5 (21 மே 2018)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதி (2013)
பிரெஞ்சு ஓப்பன் இறுதி (2017)
விம்பிள்டன் வெ (2013)
அமெரிக்க ஓப்பன் வெ (2018)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 14 சூன் 2021.

ஆசுலி பார்ட்டி (Ashleigh Barty, பிறப்பு: 24 ஏப்ரல் 1996) ஆத்திரேலியத் தொழில்-சார் டென்னிசு வீராங்கனையும், முன்னாள் துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார். இவரை மகளிர் டென்னிசு சங்கம் (ம.டெ.ச-WTA) மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் முதலாமவர் எனத் தரப்படுத்தியுள்ளது. ஆத்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் ஆத்திரேலியாவின் இரண்டாவது முதல்தர வீராங்கனையும் ஆவார். இவருக்கு முன்னர் எவோன் கோலகொங் காவ்லி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆத்திரேலிய முதல் தர தென்னிசு வீராங்கனை ஆவார்.[a] ஆசுலி பார்ட்டி மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் 12 ஒற்றையர் பட்டங்களையும், 11 இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார். இவற்றுள் ஒரு ஒற்றையர் 2019 பிரெஞ்சு ஓப்பன், ஒரு ஒற்றையர் 2021 விம்பிள்டன் கோப்பை, மற்றும் ஒரு இரட்டையர் 2018 யூ.எசு. ஓப்பன் பட்டமும் அடங்கும்.

ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தில் இப்சுவிச் நகரில் பிறந்த ஆசுலி தனது நான்காவது அகவையில் பிரிஸ்பேன் நகரில் தென்னிசு விளையாட ஆரம்பித்தார். இளைஞர் பிரிவில் 2011 ஆம் ஆண்டில் விம்பிள்டனில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்று, உலகில் இல. 2 இடத்தைப் பிடித்தார். 2013 WTA சுற்று இரட்டையர் பிரிவில் ஆரம்ப கால வெற்றியைப் பெற்றார். 16-வது அகவையில் ஆத்திரேலியத் திறந்த போட்டி உட்பட மூன்று கிராண்ட்சிலாம் இரட்டையர் போட்டிகளில் இரண்டாவதாக வந்தார். 2014 பிற்பகுதியில், இவர் தென்னிசு போட்டிகளில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்க முடிவு செய்தார். இந்த இடைவெளியில் அவர் துடுப்பாட்டத்தில் ஆர்வம் காட்டினார். துடுப்பாட்டத்தில் முறையான பயிற்சி இல்லாத போதிலும், பிரிஸ்பேன் ஹீட் அணியில் விளையாடினார்.

ஆசுலி பார்ட்டி 2016 தொடக்கத்தில் தென்னிசுக்குத் திரும்பினார். 2017 ஆம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் மலேசியத் திறந்த சுற்றில் தனது முதலாவது டபிள்யூடிஏ பட்டத்தை வென்று, உலகில் 17-வது இடத்தைப் பிடித்தார். தனது முதலாவது கிரான்ட்-சிலாம் வெற்றியை இரட்டையர் ஆட்டத்தில் 2018 இல் பெற்றார். மீண்டும் 2019 இல் இரட்டையர் பட்டம் வென்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. மகளிர் டென்னிசு சங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் 1975 இல் மார்கரெட் கோர்ட் என்பவரும் உலகின் முதல்-தர ஆட்டக்காரராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashleigh Barty".
  2. "Career Prize Money Leaders". மூல முகவரியிலிருந்து 6 November 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
One Plus One: Ash Barty, One Plus One, ABC News
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுலி_பார்ட்டி&oldid=3193055" இருந்து மீள்விக்கப்பட்டது