மார்கரெட் கோர்ட்
மார்கரெட் கோர்ட் (பிறப்பு 16 யூலை 1942) மார்கரெட் இசுமித் கோர்ட் என்றும் அறியப்படுகிறார். இவர் ஓய்வு பெற்ற டென்னிசு வீராங்கனை. உலகின் முதல் நிலை வீரராக 1962இல் இருந்துள்ளார். ஆத்திரேலியரான இவர் தற்போது பேர்த் நகரில் கிறித்துவ மத போதகராக பணியாற்றுகிறார். டென்னிசு விளையாட்டில் மற்ற எவரையும் விட அதிக கிராண்டு சிலாம் கோப்பைகள் பெற்றவர் இவரே.
டென்னிசில் ஓப்பன் காலம் தொடங்கிய பின் ஒரே ஆண்டில் கிராண்ட் சிலாமின் நான்கு கோப்பைகளையும் வென்ற முதலாம் வீரர் இவரே. 1970 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தினார். 1988 ஆம் ஆண்டு இச்சாதனையை இச்டெபி கிராப் நிகழ்த்தினார். ஓப்பன் காலம் தொடங்கிய இவர் 11பெண்கள் ஒற்றையர் கிராண்ட் சிலாம் கோப்பைகளை பெற்றுள்ளார், ஓப்பன் காலத்திற்கு முன்பு 13, (மொத்தமாக 24).
இவர் 19 இரட்டையர் கோப்பைகளையும் 21 கலப்பு இரட்டையர் கோப்பைகளையும் பெற்றுள்ளார். அதனால் மொத்தமாக 64 கிராண்ட் சிலாம் போட்டிகளில் கோப்பையை பெற்றுள்ளார். இவர் அனைத்து வகையான ஆடுகளங்களிலும் தனிநபர் பிரிவில் கோப்பையை வென்றுள்ளார். இவரின் வெற்றி விகிதம் 1087-107 அதாவது 91.68% ஆகுமென இசுபோர்டாலசி என்ற இணைய பக்கம் கூறுகிறது. ஓப்பன் காலத்தில் அவரின் வெற்றி வீதம் 91.37% (593-56). ஓப்பன் காலத்து கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டத்தில் வெற்றி வீதம் 91.7% (11-1). இவரும் கிம் கிளிசுடர்சும் குழந்தை பெற்ற பின்னும் கிராண்ட் சிலாம் கோப்பையை வென்றவர்கள் ஆவர்.[1][2] 2010இல் கிரால்டு சன் என்ற ஆவுத்திரேலிய நாளேடு கோர்ட் இதுவரை இருந்தவர்களில் மிகச்சிறந்த டென்னிசு வீரர் என புகழ்ந்தது.[3] கோர்ட் கிராண்ட் சிலாம் தொகுப்புகள் எனப்படும் தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என்ற மூன்று பிரிவுகளிலும் கோப்பையை வென்ற மூன்று பேரில் ஒருவர் ஆவார் (மூவரும் பெண்கள்). கோர்ட் இரு முறை கிராண்ட் சிலாம் தொகுப்புகள் வென்ற ஒரே வீரர்.
ரோமன் கத்தோலிகராக வளர்ந்த கோர்ட், பெந்தகோசு இயக்கத்திற்கு 1970இல் மாறினார். பின் அதில் அவ்வியக்க பரப்புரையாளராக சமய போதகராக 1991இல் மாறினார். இவர் மார்கெரட் கோர்ட் சமய போதகர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தினார், இவர் ஓரினச்சேர்க்கைக்கும் இருபால்சேர்க்கை உணர்வு கொண்டவர்களுக்கும் மாறுபட்ட பால் உணர்வு கொண்டவர்களுக்கும் எதிரான எண்ணத்தை கொண்டிருந்தார்.
இவர் இனவெறியர், தன்பால் இன எதிர்ப்பாளர் என்பதால் இவரது பெயரில் உள்ள ஆத்திரேலிய ஓப்பன் திடலின் பெயரை மாற்றச்சொல்லி மார்ட்டினா நவரத்திலோவா கோரியுள்ளார்.[4]
தொழில் வாழ்க்கை
[தொகு]மார்கெரட் கோரட் லாரன்சு சிமித்துக்கும் கேத்தரின் சிமித்துக்கும் நியு சவுத் வேல்சு மாகாணத்திலுள்ள அல்பரியில் பிறந்தார். இவருக்கு கேவின் வின்சன்ட் என்ற இரு அண்ணன்களும் யூன் சனகான் என்ற அக்காவும் உள்ளார்கள். இவர் இயற்கையில் இடக்கை ஆட்டக்காரர் ஆனால் டென்னிசு மட்டையை உறுதியாக பிடிப்பதற்காக வலது கையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார். எட்டு வயதிலிருந்து டென்னிசு ஆட ஆரம்பித்த இவர் 1960இல் 18 வயது ஆனபோது ஏழு தனிநபர் கோப்பைகளை அவுத்திரேலிய சாதனைப்போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றார். 1962இல் பிரெஞ்சு ஓப்பனையும் யூஎசு ஓப்பனையும் வென்ற போது வெளிநாட்டில் கோப்பையை வென்ற முதல் அவுத்திரேலிய பெண் ஆனார். இதற்கு பின் விம்பிள்டனை வென்ற முதல் ஆவுத்திரேலிய பெண் ஆனார். . 1966 விம்பிள்டன் வெற்றிக்குப்பின் தற்காலிகமாக ஓய்வு பெற்றார். 1967இல் பேரி கோர்ட் என்பவரை திருமணம் புரிந்தார். பேரியின் தந்தை சர் சார்லசு கோர்ட் சகோதரன் ரிச்சர்டு கோர்ட்.[5] 1968இல் மீண்டும் டென்னிசு உலகிற்கு திரும்பிய இவர் 1970இல் நான்கு கிராண்ட் சிலாம் கோப்பைகளையும் வென்றார்.[6][7] 1972ஆம் ஆண்டு விம்பிள்டன் கோப்பையை இவோன்னே கூலகோன் காலேயிடம் இழந்தார் அப்போது இவர் கருவுற்றிருந்தார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Making the case for Clijsters and Li". பார்க்கப்பட்ட நாள் 13 September 2014.
- ↑ "Moms who broke barriers". பார்க்கப்பட்ட நாள் 13 September 2014.
- ↑ "Legend Margaret Court tips Sam Stosur to win French Open". பார்க்கப்பட்ட நாள் 27 May 2011.
- ↑ "Martina Navratilova says Margaret Court is 'a racist and a homophobe'". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் சூன் 1, 2017.
- ↑ Carmody, Rebecca. "Moral High Ground For New Liberal President". Australian Broadcasting Corporation. http://www.abc.net.au/stateline/wa/content/2006/s2191991.htm. பார்த்த நாள்: 11 August 2012.
- ↑ "U.S. Open Tennis – Grand Slam for Mrs. Court.". The Canberra Times: p. 22. 15 September 1970. http://nla.gov.au/nla.news-article110460742.
- ↑ Roberts, Roberts, ed. (2008). Great Australian Sporting Moments. Carlton, Vic.: The Miegunyah Press. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0522855470.
- ↑ "Clijsters wins US Open". The Age. 14 September 2009. http://www.theage.com.au/news/sport/tennis/clijsters-wins-us-open/2009/09/14/1252780256848.html. பார்த்த நாள்: 29 October 2012.