ஆசனாம்பா கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசனாம்பா கோவில்
ஆசனாம்பா கோவில் is located in கருநாடகம்
ஆசனாம்பா கோவில்
கருநாடகம்-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா
மாவட்டம்:ஆசன்
அமைவு:ஆசன்
ஆள்கூறுகள்:13°00′09″N 76°05′36″E / 13.0024267°N 76.0933586°E / 13.0024267; 76.0933586
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:போசளர் கட்டிடக்கலை

ஹாசனாம்பா கோயில் (Hasanamba temple) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தின் தலைமையிடமான ஹாசன் நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்து சமயத்தின் சாக்தப் பிரிவின் புகழ்பெற்ற அம்மன் கோயில் ஆகும். 12-ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தீபாவளிக்கு முன்னும், பின்னும் பத்து நாட்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்திருக்கும். [1] மற்ற நாட்களில் மூடப்பட்டிருக்கும்.[2]இக்கோயிலில் சப்தகன்னியர்களுக்கும் சிறப்பிடம் உள்ளது.

புராண வரலாறு[தொகு]

சப்த கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் சாமுண்டி, வராகி மற்றும் இந்திராணி ஆகிய மூவர் மட்டும் ஹாசன் நகரில் உள்ள தேவி ஹாசனம்ப கோவிலில் நிலைகொண்டு இருப்பதாகவும், வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் மட்டும் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிராம்மி அம்மன் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசனாம்பா_கோவில்&oldid=3708111" இருந்து மீள்விக்கப்பட்டது