அஸ்பார்ட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


அஸ்பார்ட்டம்[1]
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 22839-47-0
DrugBank DB00168
KEGG C11045
ChEBI CHEBI:2877
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C14H18N2O5
வாய்ப்பாட்டு எடை 294.3 g mol-1
அடர்த்தி 1.347 g/cm3
உருகுநிலை

246–247 ° செல்சியசு

கொதிநிலை

சிதைவுறுவது

நீரில் கரைதிறன் எளிதில் கரையாதது
கரைதிறன் எத்தனாலில் சிறிது கரையும்
காடித்தன்மை எண் (pKa) 4.5–6.0[2]
தீநிகழ்தகவு
NFPA 704

NFPA 704.svg

1
1
0
 
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

அஸ்பார்ட்டம் (aspartame) என்பது ஒரு செயற்கை இனிப்பூட்டி. கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட இது 200 மடங்கு இனிப்புச் சுவையைத் தூண்டக் கூடியது. இதைச் சர்க்கரை என்று சொல்வது தவறு. ஏனெனில், வேதியியல் அடிப்படையில் இது ஃபினைல் அலனைன் மற்றும் அஸ்பார்ட்டிக் அமிலம் ஆகிய இரு அமினோ அமிலங்கள் கொண்ட ஓர் பெப்டைடு.

இது 1965 ஆம் ஆண்டில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டு நியூட்ரா சுவீட் எனும் வணிகப் பெயரில் விற்கப்பட்டது. இதன் காப்புரிமை 1992 ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது.

அதிக வெப்ப நிலையில் அஸ்பார்ட்டம் அமினோ அமிலங்களாக உடைந்து விடும். எனவே சூடான பானங்களோடு இதைப் பயன்படுத்த இயலாது. குறைவான வெப்பநிலை மற்றும் அமிலத் தன்மை கொண்ட திரவங்களில் இதன் அரை வாழ்நாள் காலம் 300 நாட்கள் ஆகும். இதனால் குளிர்பானங்கள் பலவற்றில் அஸ்பார்ட்டம் பயன்படுத்தப்படுகிறது.


அஸ்பார்ட்டம் ஃபினைல் அலனைன் அமினோ அமிலத்தைக் கொண்டிருப்பதால் ஃபினைல் கீட்டோனூரியா நோய் உடையோர் இதைப் பயன்படுத்தக் கூடாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Budavari, Susan, தொகுப்பாசிரியர் (1989). "861. Aspartame". The Merck Index (11th ed.). Rahway, NJ: Merck & Co.. p. 859. ISBN 91191028X. 
  2. Rowe, Raymond C. (2009). "Aspartame". Handbook of Pharmaceutical Excipients. பக். 11–12. ISBN 1-58212-058-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்பார்ட்டம்&oldid=1605125" இருந்து மீள்விக்கப்பட்டது