அவாஸ்ட்!
உருவாக்குனர் | அல்வில் சாப்ட்வேர் |
---|---|
அண்மை வெளியீடு | 4.8.1282 / நவம்பர் 12 2008 |
இயக்கு முறைமை | வின்டோஸ் 95 உம் அதற்கு மேம்பட்ட வின்டோஸ் பதிப்புக்களும். [1][2] மற்றும் லினக்ஸ்[3] |
மென்பொருள் வகைமை | நச்சுநிரல் |
உரிமம் | Proprietary / இலவசமென்பொருள் |
இணையத்தளம் | www.avast.com |
செக் நாட்டில் உள்ள அல்வில் சாப்ட்வேர் அவாஸ்ட்! நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளைத் (Anti-virus software) தயாரித்து விநியோகிக்கின்றது. இது முதலில் 1998 ஆம் ஆண்டு வெளிவிடப்பட்டது. தற்போது 27 மொழிகளில் கிடைக்கின்றது. அவாஸ்ட் 64பிட் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு எனத்தயாரிக்கபட்ட நிகழ்நிலைப் பாதுகாப்பை அளிக்கும் வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் ஆகும். அவாஸ்ட் 'ஹோம்' பதிப்பானது நவம்பர் 2008 இன்படி 32 மில்லியனுக்கும் மேற்பட்டபதிவிறக்கத்தையும் [4] மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட பயனர்களைத் கொண்டுள்ளது. [5] இது பொதுவாக கிரிசாப்டின் ஏவிஜி ஆண்டிவைரஸ் (ஏவிஜி நச்சுநிரல்) எதிர்ப்பு மென்பொருளுடன் பொதுவாக ஒப்பிடப்படுகின்றது.
இது பல்வேறுபட்ட ஆபத்துக்களைகளில் இருந்து தடுப்பதற்காக உருவாக்கப்படுகின்றது. இது தொழில்நுட்பரீதியாக நச்சுநிரல், ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்கள் போன்றவற்றிலிருந்து மாத்திரம் அல்லாது பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும் நச்சுநிரலில் இருந்து மீள்விக்கும் தகவற் தளத்தில் இருந்து பாதுகாக்கின்றது. இது முழுமையான சொற் மற்றும் ஒலிபெயர்புக்களைப் பதிவிறக்கம் செய்யவியலும்.
வசதிகள்
[தொகு]- நியமப் பாதுகாப்பு (ஸ்ராண்டட் ஷீல்ட்)
- தூதுவர்களில் இருந்து பாதுகாப்பு
- பீர்-பீர் பாதுகாப்பு
- மின்னஞ்சல் பாதுகாப்பு
- அவுட்லுக்/எக்ஸ்சேஞ் பாதுகாப்பு
- இணையப் பாதுகாப்பு
- ஸ்ரிப்ட் தடை (ஸ்கிரிப்ட் புளொக்கர்) (Pro பதிப்பிற்கு மாத்திரம்)
- வலையமைப்புப் பாதுகாப்பு
- ஓலியூடான எச்சரிக்கைகள் - வைரஸைக் கண்டுபிடித்ததும் "Caution, a virus has been detected!" என்றவாறு சத்தமிடும்.
- ஆரம்பிக்கும் போதான ஸ்கான் - விண்டோஸ் பணிச்சூழலை ஆரம்பிக்கும் பொழுதே ஸ்கானை ஆரம்பிக்கும் வண்ணம் இதை தேர்ந்தெடுக்க வியலும். இது கணினி வைரஸ்கள் வின்டோஸை ஆரம்பிக்கும் பொழுது வைரஸ் பாதுகாப்பை நிறுத்தும் வண்ணம் செய்யும் வைரஸ் நிரல்களுக்கானது.
- தானாகவே பாதுகாத்தல் - கெட்ட மென்பொருட்கள் அவாஸ்ட் ஆண்டிவைரஸில் மாற்றங்களை ஏற்படாவண்ணம் பாதுகாத்தல்.
- விருப்படியான இடைமுகம்
- தானியங்கி முறையிலான வைரஸ் அகராதி மேம்படுத்தல்கள். இதன்மூலம் ஒரு நாளில் சிலசமயங்களில் பல்வேறு மேம்படுத்தல்களை மேற்கொள்ளும்.
- வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு கோப்பை வேறாக்கும் வசதி.
பதிவு (வீட்டுப்பதிப்புக்கானது)
[தொகு]அவாஸ்ட்! 60 நாட்களுக்குள்ளாகப் பதிசெய்யப்பட்டால் வேண்டும் அல்லது 60 நாட்களுக்குப் பின்னர் அவாஸ்ட்! நச்சுநிரல் வேலை செய்யாது. அவாஸ்ட்! பதிசெய்யதும் மின்னஞ்சல் மூலமாக உரிய அனுமதி அனுப்பப்படும். அதில் இருந்து 1 வருடத்திற்குப் பாவிக்கலாம். பின்னர் மீண்டும் பதிவு செய்தல் வேண்டும்.
பதிப்புக்கள்
[தொகு]இது தற்போது இதன் விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பில் 4.8 இல் உள்ளது. கீழ்வருவன பல்வேறுபட்ட இயங்குதளங்கள் மற்றும் பல்வேறு பணிச்சூழலுக்கானவை.
- அவாஸ்ட்! 4 வீட்டுப்பதிப்பு (இலவச மென்பொருள் பிரத்தியேக மற்றும் வர்தக நோக்கல்லாத பாவனைகளுக்கு - வீட்டுப்பாவனைக்கான முழுமையான நச்சுநிரல் எதிர்ப்பு நிரல்.
- அவாஸ்ட்! 4 புரொஷனல் வணிகரீதியானது ஷேர்வேர் - கணினிகளுக்கான மேலதிகபாதுகாப்புடன் வெளிவந்துள்ளது.
- அவாஸ்ட்! 4 SBS எடிசன் (வணிகரீதியானது) - சிறு வணிக நிறுவனங்களுக்குப் பொருத்தமான விண்டோஸ் சேர்வருகான பதிப்பு.
- அவாஸ்ட்! 4 சேவர் shareware - சேர்வர்களைப் பாதுகாப்பதெற்கென உருவாக்கப்பட்ட ஓர் ஆண்டிவைரஸ் பதிப்பாகும். நீட்சிகள் மூலம் மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ் சேர்வர் 2000/2003, மைக்ரோசாப்ட் புறொக்சி/ஐசா சேர்வர் மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் சேர்வர் போன்றவற்றையும் பாதுகாக்கக்கூடியது.
- அவாஸ்ட்! U3 shareware - U3 ஸ்மாட் டிரைவ்ஸ் (smart drives) களை நச்சுநிரல்கள் (வைரஸ்) மற்றும் ஏனைய கெட்ட நிரல்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- ↑ "அவாஸ்ட்! வீட்டுப் பதிப்பிற்கான வன்பொருட் தேவைகள்". அல்வில் சாப்ட்வேர். பார்க்கப்பட்ட நாள் சூலை 21, 2007.
- ↑ "System Requirements - avast! Server Edition". அல்வில் சாப்ட்வேர். Archived from the original on 2007-02-18. பார்க்கப்பட்ட நாள் சூலை 21, 2007.
- ↑ "அவாஸ்ட்! லினக்ஸ் வீட்டுப்பதிப்பு - கணினியின் வன்பொருட் தேவைகள்". அல்வில் சாப்ட்வேர். பார்க்கப்பட்ட நாள் சூலை 21, 2007.
- ↑ "Avast Free Antivirus". Download.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
- ↑ இரண்டு வேறுபட்ட வழிமுறைகளால் வைரசுடன் போரிடல் வாஷிங்கட்ன் போஸ்ட், அணுகப்பட்டது செப்டம்பர் 5, 2008 (ஆங்கில மொழியில்)