ஏவிஜி ஆண்டிவைரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏவிஜி ஆண்டிவைரஸ்
உருவாக்குனர்கிரிசாப்ட், s.r.o.
அண்மை வெளியீடு8.0.176a1400 / திசம்பர் 4 2008 (2008-12-04), 5169 நாட்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ், லினக்ஸ்
மென்பொருள் வகைமைநச்சுநிரல்
உரிமம்இலவச மற்றும் வர்தரீதியான
இணையத்தளம்கிர்சாப்ட்

ஏவிஜி ஆண்டிவைரஸ் (இதில் AVG என்பது Anti Virus Guard) மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான பல்வேறு பட்ட நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்களின் தொகுப்பு ஆகும்.

முக்கியமான நிகழ்வுகள்[தொகு]

ஏவிஜி 1991 இல் உருவாக்கபட்ட கிரிசாப்டினால் தயாரிக்கபடும் மென்பொருளாகும்.

செப்டெம்பர் 2005 இல் பங்குகளின் பெரும்பகுதியானது இண்டெலினால் வாங்கப்பட்டது. ஏப்ரல் 19 2006 ewido நெட்வேக் கிரிசாப்ட் குழுவின் ஓர் அங்கம் ஆகியது.

நவம்பர் 6, 2006 மைக்ரோசாப்ட் ஏவிஜி பாதுகாப்பு மென்பொருட்கள் விண்டோஸ் செக்கியூரிட்டி செண்டரூடாகத் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என அறிவித்தது.

விண்டோஸ் கிளையண்டின் பதிப்புக்கள்[தொகு]

  • ஏவிஜி பிறீ எடிசன், வீட்டுப் பாவனைக்காக எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி எத்தனை தடவையும் மேம்படுத்தல்கள் உட்படப் பாவிக்கூடிய ஓர் இலவச மென்பொருளாகும். இதை வர்த்தக ரீதியாகப் பாவிப்பது சட்டவிரோதமானதாகும்.
  • ஏவிஜி ஆண்டிவைரஸ் புரொபெஷனல் எடிசன், சிறிய வர்தக நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பாவனைக்களுக்கானது. 2, 3, 5 பயனர் அனுமதியுடன் கிடைக்கின்றது.
  • ஏவிஜி பிளஸ் பயர்வால் எடிசன், இது புரொபெஷனல் பதிப்பிற்கு பாதுக்காப்புச் சுவர் என்கின்ற பயர்வாலைச் சேர்க்கின்றது.
  • ஏவிஜி ஆண்டி மல்வயார் எடிசன், இது ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டிமல்வயார் ஆகிய இரண்டு வசதிகளையும் கொண்டுள்ளது.
  • ஏவிஜி இண்டநெட் செக்கியூரிட்டி செண்டர், இது ஆண்டிவைரஸ், பயர்வால், ஆண்டிமல்வயார் மற்றும் ஆண்டி ஸ்பாம் வசதிகளை உடையது.
  • ஏவிஜி அண்டி ஸ்பைவேர் எடிசன், ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்களுக்கெதிரான மென்பொருள்,
  • ஏவிஜி நெட்வேக் எடிசன் - ஏவிஜி இன் 7.5 பதிப்பில் இருந்து பல்வேறுபட்ட நெட்வேக் பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.

எல்லா பதிப்புக்களும் விண்டோஸ் 64 பிட் பதிப்புக்களுடன் வேலைசெய்யக்கூடியவை எனினும் இலவசப் பதிப்பானது 32 பிட் விண்டோஸ் உடன் மாத்திரமே வேலை செய்யும்.

எல்லா கிரிசாப்ட் பதிப்புகளுமே சோதனைக்காப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியவை இவை 30 நாட்களில் காலவதியாகி விடும் பின்னர் அனுமதியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்..

வழங்கிக்கான பதிப்புக்கள்[தொகு]

கிரிசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் வழங்கிகளுக்கான பதிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

  • ஏவிஜி ஈமெயில் சேவர் எடிசன் - வழங்கி மற்றும் மின்னசல் போன்றவற்றை நச்சுநிரல்கள் மற்றும் ஒற்றுமென்பொருட்களில் இருந்து பாதுக்காக்கின்றது. இது மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் சேவரிற்கும் பாதுகாப்பளிக்கின்றது.
  • ஏவிஜி பைல் சேவர் எடிசன் - சேவரின் கோப்புக்கள் மற்றும் இணைய வழங்கியினைப் பாதுகாக்கின்றது. இதன் அனுமதியானது இணைப்பிற்கு ஏற்றமாதிரி மாறுபடும்.

ஏவிஜி லினக்ஸ் மற்றும் ஃபிறீபிஸ்டி (FreeBSD)[தொகு]

ஏவிஜி லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ள ஓர் குறிப்பிடத்தக்க வைரஸ் எதிர்ப்புநிரலாகும். இதன் 7.5 ஆம் பதிப்பில் இருந்து முதன் முறையாக பிறீபிஸ்டி (FreeBSD) இயங்குதளத்திற்கு ஆதரவளிக்கப் படுகின்றது. லினக்ஸ்/பிறீபிஸ்டி பதிப்புக்களில் எரிதங்கள் (ஸ்பாம்) கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்[தொகு]

ஏவிஜி இல் ஏனைய பொதுவான நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள் போலவே காலத்திற்குக் காலம் கிரமமாக கோப்புக்களை கந்தைப்பார்த்தல், SMTP ஊடக வெளிச்செல்லும் மற்றும் POP3 ஊடக உள்வரும் மின்னஞ்சல்களை ஸ்கான் செய்து தேர்வுக்குரிய ஸ்கான் செய்யபட்டது என்றாவாறு காட்சியளிக்கும் சொற்பிரயோகத்தையும் சேர்த்துக் கொள்ளும் வசதி. அத்துடன் ஏதாவது வைரஸ் காணப்பட்டால் அதை சுகப்படுத்தவோ முடியாவிட்டால் வைரஸ் வலட் என்கின்ற கோப்புறைக்குள் பாதுக்காப்பாகச் சேமிக்கப்படும்.

AVGADMIN என்கின்ற வசதிகொண்டு வலையமைப்புக்களில் மென்பொருட்களை தானியங்கிமுறையில் கையாளவிலும்.

ஏவிஜி இலவசப் பதிப்பு[தொகு]

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏவிஜி இலவசப் பதிப்பு வித்திட்டது. கிரிசாப்டின் அறிக்கையின் படி இலவசப் பயனர்கள் உட்பட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் கிரிசாப்ட் வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களைப் பாவிக்கின்றனர். சிநெட் இணையத்தளத்தில் இதை 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் [1]

ஏவிஜின் இலவசப் பதிப்பு வர்தகப் பதிப்பை ஒத்திருந்தாலும் கூட வர்தகப் பதிப்பில் உள்ள வசதிகள் யாவும் இதில் கிடையாது. எவ்வாறு வைரஸ் ஸ்கான் செய்யப்படவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது அத்துடன் இம்மென்பொருளில் இடைமுகமானது ஆங்கிலத்தில் மாத்திரமே உண்டு புரொபெஷனல் பல்வேறுபட்ட ஐரோப்பிய மொழிகளை ஆதரித்தாலும் தமிழ் உட்பட இந்திய மொழிகள் ஏதும் இதுவரை கிடையாது.

கிரிசாப்ட் உடனடியான தொழில்நுட்ப உதவிகளை பணம்செலுத்திய பயனர்களு மாத்திரமே அளிககப்படும் இலவசப்பதிப்பில் தொழில்நுட்ப உதவிகள் எதனையும் கிரிசாப்ட் வழங்காது என்றாலும் கிரிசாப்டின் இணையத்தளத்திலேயே சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள விவாதமேடையில் இதன் விடயங்களை இலவசமாக விவாதிக்கலாம்.

கிரிசாப்ட் அதன் 7.1 இலவசப் பதிப்பு 18 பெப்ரவரி 2007 காலாவதியாகுவதியாகியது. எல்லாப் பயனர்கள் இதன் 7.5 பதிப்பிற்கு மேம்படுத்தல் வேண்டும். கிரிசாப்ட் பயனர்களை வர்தரீதியான பதிப்புக்களை வாங்குமாறு பரிந்துரைக்கின்றனர். இதற்கு கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்களின் தாக்கமானது வைரஸ்களை விட அதிகமாக உணரப்பட்டதே காரணமாகும். ஏவிஜி ஆண்டிவைரஸ் ஸ்பைவேரை கண்டுபிடிக்காவிட்டாலும் கூட இதன் ஏவிஜி ஆண்டிஸ்பைவேரில் இலவசப்பதிப்பின் மூலம் செய்யலாம் எனினும் இலவசப் பதிப்பில் நிகழ்நிலைத் தற்காப்பு (Realtime Protection) 30 நாட்களுக்கு மாத்திரமே வேலைசெய்யும்.

ஏவிஜி ஆண்டிவைரஸின் விண்டோஸ் இயங்குதளத்திற்கான இலவசப் பதிப்பு 32பிட் விண்டோஸ் கணினிகளில் மாத்திரமே வேலைசெய்யும் 64பிட் இயங்குதளத்தில் வேலைசெய்யாது இதற்குப் புரொபெஷனல் பதிப்பு அவசியம். எனினும் இதன் போட்டியாளர்கள் அவாஸ்ட்! மற்றும் ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் போன்ற இலவசப் பதிப்புக்கள் 64பிட் இயங்குதளத்தில் வேலை செய்யும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. இலவச ஏவிஜி ஆண்டிவைரஸ் பதிவிறக்கம் பரணிடப்பட்டது 2007-02-25 at the வந்தவழி இயந்திரம்சிநெட் டவுண்லோட்.காம் இணையத்தளத்தில் 14 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அணுகப்பட்டது 25 பெப்ரவரி, 2007 (ஆங்கில மொழியில்)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவிஜி_ஆண்டிவைரஸ்&oldid=3593953" இருந்து மீள்விக்கப்பட்டது