அழகொடி தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகொடி தேவி கோயில் இந்தியாவில் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருதியாடு என்னுமிடத்தில் உள்ள இந்துக் கோயிலாகும். மிகவும் பழமையான வாய்ந்த, வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோயில் கோவிலான அழகோடி தேவி மகாசேத்திரம் என்றழைக்கப்படுகிறது. [1] கேரள பாணியிலான கட்டடக்கலைக்கு இக்கோயில் புகழ்பெற்றதாகும். கேரள பாணியிலான கட்டடக்கலைக்கு இக்கோயில் புகழ்பெற்றதாகும். [2]

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் பத்ரகாளி வாள், கபாலம், திரிசூலம், பிறை சந்திரன், பாம்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளார். இவர் தனது பக்தர்களுக்கு திருமண வாழ்க்கையை அருள்வதோடு, அவர்களை எதிரிகளிடமிருந்து காத்து, அறிவை அருளுகிறார்.

துணைத்தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் ஏழு தாய்த்தெய்வங்கள் எனப்படுகின்ற சப்தகன்னியரான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இங்கு சிவலிங்கமும் உள்ளது. சாஸ்தா இங்கு பிரபா, சத்யகன் ஆகியோருடன் உள்ளார். அவருக்கு வலப்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், இடது புறத்தில் கணபதியும் உள்ளனர். கணபதியின் சிலைகள் தேவியின் சன்னதியின் அக்னிகோனிலும், இறைவன் சாஸ்தாவிற்கு அருகிலும் உள்ளன. சிவபெருமானின் அவதாரமான உன்னித்திருபுரந்தகன், அந்தி சாயும் நேரத்தில் நடனக் கலைஞராகக் காட்சியளிக்கின்ற அந்திமஹாகாலன் எனப்படுகின்ற சிவன் ஆகியோர் உள்ளனர். தேவகி வாசுதேவர் ஆகியோரின் குழந்தையான வேணுகோபாலன் புல்லாங்குழல் ஏந்தி வரும் மாடு மேய்ப்பவராக உள்ளார்.

விழாக்கள்[தொகு]

மலையாள மேடம் மாதத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து திருவாதிரை நட்சத்திரத்தில் பள்ளிவேட்டையும், புனர்த்தம் நட்சத்திரத்தில் ஆராட்டும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பகவத சப்தாஹம் நிகழ்த்தப்படுகிறது. இங்கு நவராத்திரி, விஜயதசமி உள்ளிட்டவையும் கொண்டாடப்படுகின்றன.

நிர்வாகம்[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகின்ற இக்கோயில் மலபார் தேவசம் போர்டு கோயிலின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகொடி_தேவி_கோயில்&oldid=3831612" இலிருந்து மீள்விக்கப்பட்டது