அளவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அளக்கப்படும் பாங்கு அளவை எனப்படும். பொருள், இடம், காலம், கருத்து என்பவை அளக்கப்படும் பொருள்கள். அனைத்துக்கும் பயன்படுவது எண்ணல் அளவை.

பொருளை உரு, வண்ணம், வடிவு என்னும் கண்ணோட்டத்தில் அளக்கின்றனர்.[1] திடப்பொருள், திரவப்பொருள், ஆவிப்பொருள் என்பன பொருள்களின் உருவம். முகத்தல் அளவை, நிறுத்தல் அளவை, அமுக்க அளவை போன்றவை இதற்குப் பயன்படுகின்றன. கருமை, வெண்மை, செம்மை, பசுமை, மஞ்சள், ஊதா முதலானவை பொருளின் வண்ணங்கள். உருண்டை, கூர்மை போன்றவை வடிவ அளவைகள். வெப்பம், அழுத்தம், அணுத்திறள் முதலானவை இக்கால அறிவியல் அளவைகள். இடமானது தொலைவு, பரப்பளவு ஆகிய கோணங்களில் அளக்கப்படும். கால அளவை நாளை மையமாகக் கொண்டது. ஒரு நாளைக் கூறு போட்டும், கூட்டியும் இதனை அளக்கிறோம். மேலும் எண்ணத்தை 10, 8, 6 என்று பாகுபடுத்தி அளக்கும் முறைமை பற்றி மணிமேகலை நூல் குறிப்பிடுகிறது.[2]

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் 272
  2. மணிமேகலை சமயக்கணக்கர் தம்-திறம் உரைத்த காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவை&oldid=2745426" இலிருந்து மீள்விக்கப்பட்டது