தொலைவுக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் எண்கள், இந்தோ அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தும் ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்)

தொலைவுக்கல் என்பது போக்குவரத்துப் பாதையில் அடுத்துள்ள முக்கிய ஊருக்கான தொலைவைக் காண்பிப்பதற்காக நடும் ஒரு கல்லாகும். இந்தக் கல்லில் அடுத்துள்ள முக்கிய ஊரின் பெயரும் அதன் கீழ் அந்தக் கல்லிலிருந்து குறிப்பிடப்பட்ட முக்கிய ஊருக்கான தொலைவும் கிலோமீட்டர் அளவில் தரப்பட்டிருக்கும்.

இந்தியாவில் பல மொழிகள் பயன்பாட்டிலுள்ளதால், அந்தக் கல்லில் கல் நடப்பட்டுள்ள மாநிலப் பகுதியின் பயன்பாட்டிலுள்ள மொழியிலும் அதன் கீழ் ஆங்கிலத்திலும் ஊரின் பெயர் இடம் பெற்றிருக்கும். சில கற்களில் பயன்பாட்டிலுள்ள மேலும் சில மொழிகளும் குறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் தொலைவு கிலோ மீட்டர் அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இவை முதன்மைத் தொலைவுக்கற்களாகும். முன்பு இக்கற்களில் பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தொலைவுகளை அளக்கப் பயன்படும் மைல் நீள அலகு கணக்கில் குறிப்பிட்டதால் மைல் கற்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இரு முதன்மைக் கற்களுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய அளவிலான கற்கள் நடப்பட்டிருக்கின்றன.

சென்னையை அடைந்துவிட்டதைக் காட்டும் தொலைவுக் கல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைவுக்_கல்&oldid=1426000" இருந்து மீள்விக்கப்பட்டது