உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருமபுரி அகழ்வைப்பகத்தில் உள்ள அதியமான் பெருவழிக்கல்

பெருவழி என்பது தற்கால நெடுஞ்சாலைகளுக்கு இணையாக ஒப்பாக அமையாவிடினும், பழந்தமிழகத்தின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் வகையில் அமைந்த சாலைகளாகும் அக்காலத் தமிழகத்தில் போக்குவரத்திற்கு வணிகர்களும், மக்களும் பயன்படுத்திய சாலைகள் ஆகும். தமிழகத்து பெருவழிகள் பெரும்பாலும் ஆறுகளை ஒட்டியே சென்றன. கண்ணகி வையைக்கரை வழியாக சென்றாள் என்ற சிலப்பதிகாரக் கூற்று இதை உறுதிப்படுத்தும்.

பெருவழிகள் சென்ற ஊர்கள்

[தொகு]

காஞ்சிபுரத்திலிருந்து பூனா வரையில் ஒன்றும், கள்ளிக்கோட்டையிலிருந்து இராமேசுவரம்வரை ஒன்றும், கோவாவிலிருந்து தஞ்சாவூர், நாகை வரை ஒன்றும் என பண்டை நாளில் பெருவழிகள் சென்றதாக கூறுவர். இவை மட்டுமின்றி தட்சிணப் பெருவழி என்ற பெருவழியானாது காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைக்கும் விதத்தில் இருந்ததென்பர், இப்பெருவழி மகதத்தையும் கன்னியா குமரியையும் இணைத்தது என்ற கருத்தும் உள்ளது. [1]

பெருவழிகளின் பெயர்கள்

[தொகு]

சங்க காலத்துக்குப் பின் அரசாண்ட பல்லவ, பாண்டிய, சோழ, விசயநகர, நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகளில் கோயில்களுக்கும், பிராமணர்களுக்கும் அளிக்கப்பட்ட கொடை நிலங்களுக்கும், ஊர்களுக்கும் எல்லை கூறும்போது பல பெருவழிகளும், இட்டுநெறிகளும் காட்டப்பட்டுள்ளன. மன்னர்கள், அரசமாதேவியர் பெயரில் பல பெருவழிகள் இருந்துள்ளன. அவற்றில்சில

குறிப்புகள்

[தொகு]
  1. "உலகிற்கே வழிகாட்டும் பண்டை தமிழகத்தின் மைல்கற்கள் - ஒரு சுவாரஸ்ய பயணம்!". கட்டுரை. தினமணி. 20 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு,விழாமலர்,மதுரை,1981,பக் 388-389
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவழி&oldid=3577904" இலிருந்து மீள்விக்கப்பட்டது