தொல்லியல் அருங்காட்சியகம், தருமபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அதியமான் பெருவழிக்கல்

தர்மபுரி தொல்லியல் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தருமபுரி வட்டத்திலுள்ள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இங்கே போர் வீரர்களுக்கான நடுகற்கள் அதிகம் பராமரிக்கப்படுவதால் இதை நடுகல் அருங்காட்சியகம் என்றே அழைக்கின்றனர். இது 1979ல் ஆரம்பிக்கப்பட்டது.

காட்சியகம்[தொகு]

இதில் 25க்கும் மேற்பட்ட நடுகற்களும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலம் சார்ந்த பொருட்கள், சுடுமண் ஈமப்பேழைகள், குத்துவாள், நாணயங்கள், பதக்கங்கள், இரும்பு பொருட்கள், பனை ஓலைச்சுவடிகள், முக்காலி ஜாடிகள், சமணச் சிற்பங்கள், பீரங்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுளன.

மூலம்[தொகு]