அல் அமீன் (துடுப்பாட்டக்காரர்)
அல் அமீன் | ||
துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |
முதல் | ஏ-தர | |
ஆட்டங்கள் | ஆறு | ஆறு |
ஓட்டங்கள் | 73 | 34 |
துடுப்பாட்ட சராசரி | 10.42 | 8.50 |
100கள்/50கள் | -/- | -/- |
அதிக ஓட்டங்கள் | 17 | 14* |
பந்து வீச்சுகள் | 366 | 342 |
இலக்குகள் | மூன்று | 13 |
பந்துவீச்சு சராசரி | 63.00 | 11.46 |
சுற்றில் ஐந்து இலக்குகள் | - | - |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | - |
சிறந்த பந்துவீச்சு | 1/19 | 4/30 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 2/- |
Debut: 2000 |
அல் அமீன் (Al Amin, பிறப்பு: செப்டம்பர் 6 1972), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார் .மேலும் வங்காளதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பரிசல் புல்ஸ் அணிக்காக இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ராஜாஷி பல்கலைக்கழகத்தில் பயின்றார்.[1]
தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]2013 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . அக்டோபர் 21 , இல் தாக்காவில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 1 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஆனால் ஓட்டங்களை எடுக்கவில்லை. பின் பந்துவீச்சில் துவக்க ஓவர்களை வீசினார். இதில் 16 ஓவர்கள் வீசினார். அதில் 3 ஓவர்கள் மெய்டனாகும். 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சுசராசரி 3.62 ஆகும். இந்தப்போட்டி சமனில் முடிந்தது.[2]
இறுதிப் போட்டி
[தொகு]2014 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . அக்டோபர் 25 , இல் தாக்காவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 15 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் துவக்க ஓவர்களை வீசினார். இதில் 14 ஓவர்கள் வீசினார். அதில் 1 ஓவர் மெய்டனாகும். 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்கினைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சுசராசரி 3.21 ஆகும். இந்தப்போட்டி சமனில் முடிந்தது.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியின் பந்துவீச்சில் துவக்க ஓவர்களை வீசினார். இதில் 8 ஓவர்கள் வீசினார். அதில் 2 ஓவர் மெய்டனாகும். 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 3 இலக்குகள் வித்தியாசத்துல் வெற்றி பெற்றது.[3]
ஒருநாள் போட்டிகள்
[தொகு]2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 17, தாக்காவில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 8 ஓவர்கள் வீசினார். இதில் 1ஓவர் மெய்டனாகும். 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]
பன்னாட்டுஇருபது20
[தொகு]2016 ஆம் ஆண்டிற்கான 2016 ஐசிசி உலக இருபது20 தொடரில் மார்ச் 26, கொல்கத்தாவில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் விளையாடினார்.இந்தப் போட்டியில் 2 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சோதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசினார். 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]
ஆட்டநாயகன் விருது
[தொகு]# | தொடர் | ஆண்டு | எதிரணி | செயல்பாடு | முடிவு |
---|---|---|---|---|---|
1 | 2014 ஐசிசி உலக இருபது20 | 2014 | நேபாளத் தேசியத் துடுப்பாட்ட அணி | 4–0–17–2 ; DNB | வங்காளதேசம் 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[6] |
சான்றுகள்
[தொகு]- ↑ Isam, Mohammad (14 August 2014). "Hard work nothing new to Al-Amin". ESPNcricinfo. http://www.espncricinfo.com/bangladesh/content/story/769977.html.
- ↑ "2nd Test, New Zealand tour of Bangladesh at Dhaka, Oct 21-25 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ "1st Test, Zimbabwe tour of Bangladesh at Dhaka, Oct 25-27 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ "1st ODI (D/N), Sri Lanka in Bangladesh ODI Series at Dhaka, Feb 17 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ "28th Match, Super 10 Group 2 (D/N), World T20 at Kolkata, Mar 26 2016 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ "ICC World Twenty20, 2014 First Round Group A – 6th match Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 25 February 2015. http://www.espncricinfo.com/ci/engine/match/682907.html. பார்த்த நாள்: 12 March 2015.