உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லைல் ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லைல் ஆல்ககால்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-புரோபெனால், அல்லைல் ஆல்ககால்
வேறு பெயர்கள்
1-புரோபேன்-3-ஆல் [1]
வினைல் கார்பினால்[1]
இனங்காட்டிகள்
107-18-6 Y
ChEBI CHEBI:16605 Y
ChEMBL ChEMBL234926 Y
ChemSpider 13872989
InChI
  • InChI=1S/C3H6O/c1-2-3-4/h2,4H,1,3H2 Y
    Key: XXROGKLTLUQVRX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H6O/c1-2-3-4/h2,4H,1,3H2
    Key: XXROGKLTLUQVRX-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02001 Y
பப்கெம் 7858
  • C=CCO
பண்புகள்
C3H6O
வாய்ப்பாட்டு எடை 58.08 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம் [1]
மணம் கடுகு மணம் [1]
அடர்த்தி 0.854 g/ml
உருகுநிலை −129 °C
கொதிநிலை 97 °C (207 °F; 370 K)
கலக்கும்
ஆவியமுக்கம் 17 mm Hg[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு நச்சுத்தன்மை கொண்டது. (T)
சுற்றுச் சூழலுக்கு அபாயமானது. (N)
தீப்பற்றும் வெப்பநிலை 21 °C (70 °F; 294 K)
Autoignition
temperature
378 °C (712 °F; 651 K)
வெடிபொருள் வரம்புகள் 2.5–18.0%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அல்லைல் ஆல்ககால் (Allyl alcohol) என்பது CH2=CHCH2OH என்ற மூலக்கூறு அமைப்பு வாய்பாடு கொண்டுள்ள ஒரு கரிமச் சேர்மமாகும். பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் இச்சேர்மத்திற்கு 3- புரோபெனால் என்று பெயர் சூட்டியுள்ளது. பல ஆல்ககால்களைப் போல நிறமற்ற திரவமாய் தண்ணீரில் கரையக்கூடியதாக அல்லைல் ஆல்ககால் இருக்கிறது. குறிப்பிட்ட சில மெல்லிய ஆல்ககால்களை விட நச்சுத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. கிளிசரால் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளாக அல்லைல் ஆல்ககால் பயன்படுகிறது. சிலவகை சிறப்புத் தீத்தடுப்பு பொருட்கள், உலரும் எண்ணெய் மற்றும் நெகிழியாக்கிகள்[2] போன்ற சிறப்புத் தயாரிப்புகளுக்கு முன்னோடியாகவும் விளங்குகிறது. அல்லைல் ஆல்ககாலை இன்று பல்வேறு முறைகளில் தயாரிக்க முடியும். அல்லைல் ஆல்ககால்களின் மிகஎளிய ஆல்ககால் CH2=CHCH2OH என்ற வாய்பாட்டை கொண்டிருக்கும் அல்லைல் ஆல்ககாலாகும்.

முதன்முதலில் 1856 ஆம் ஆண்டு ஆகசிடே கேயவர்சு மற்றும் ஆகத்து ஆஃப்மான் ஆகியோர் அல்லைல் அயோடைடில் இருந்து சோப்பாக்குதல் முறையில் அல்லைல் ஆல்ககால்[2] தயாரித்தார்கள். அல்லைல் குளோரைடை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி வணிகரீதியாக தற்பொழுது டொவ் நிறுவனம் மற்றும் செஃல் ( shell ) நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

CH2CHCH2Cl + NaOH → CH2CHCH2OH + NaCl

வினையூக்கி பொட்டாசியப் படிகாரம் உதவியுடன் புரோப்பைலீன் ஆக்சைடு உயர் வெப்பநிலையில் மறுசீரமைப்பு அடையும் முறையிலும் அல்லைல் ஆல்ககாலைத் தயாரிக்க முடியும். அல்லைல் குளோரைடைப் பயன்படுத்தி தயாரிக்கும் முறையைக் காட்டிலும் இம்முறையில் அல்லைல் ஆல்ககால் தயாரிப்பது சிறந்தது ஆகும். ஏனெனில் பின்னதில் உப்பு உருவாக்கப்படுவதில்லை என்பதோடு குளோரின் சேர்ந்துள்ள இடைநிலைகள் தவிர்க்கப்படுகின்றன. புரோப்பைலீன், அல்லைல் அசிட்டேட்டாக அசிட்டாக்சிலேற்றம் அடைகிறது.

CH2=CHCH3 + 1/2 O2 + CH3CO2H → CH2CHCH2O2CCH3 + H2O

இந்த அசிட்டேட்டு பின்னர் நீராற்பகுப்படைந்து அல்லைல் ஆல்ககாலைத் தருகிறது. புரோப்பைலீனை ஆக்சிசனேற்றம் செய்து அக்ரோலீன் தயாரித்து பின்னர் அதை ஐதரசனேற்றம் செய்தும் அல்லைல் ஆல்ககால் தயாரிக்க முடியும்.

வேறு முறைகள்

[தொகு]

கோட்பாடுகளின்படி புரோப்பனாலை ஐதரசன் நீக்கம் செய்து அல்லைல் ஆல்ககாலைத் தயாரிக்க முடியும். கிளிசராலை ஆக்சாலிக் அமிலம் அல்லது பார்மிக் அமிலம் சேர்த்து வினைப்படுத்தியும் ஆய்வகத்தில் அல்லைல் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது.[3][4] பொதுவாக அல்லைலிக் சேர்மங்களை செலினியம் டையாக்சைடு முன்னிலையில் அல்லைலிக் ஆக்சிசனேற்றம் அடையச் செய்து அல்லைல் ஆல்ககால் தயாரிக்கிறார்கள்.

பயன்கள்

[தொகு]

தொகுப்பு முறையில் கிளிசரால் தயாரிக்கும்போது அல்லைல் ஆல்ககாலை கிளைசிடால் என்ற வேதியல் இடைநிலையாக மாற்றி பயன்படுத்துகிறார்கள். இதைத்தவிர கிளைசிடைல் ஈதர், கிளைசிடைல் எசுத்தர், கிளைசிடைல் அமீன்கள் தயாரிக்கவும் இது பயனாகிறது. டையல்லைல்தாலேட்டு போன்ற பலபடியாகும் எசுத்தர்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது [2].

பாதுகாப்பு

[தொகு]

தொடர்புடைய மற்ற ஆல்ககால்களை விட அல்லைல் ஆல்ககால் நச்சுத்தன்மை மிகுந்தது. இதனுடைய நச்சுத்தன்மை வாயில் வரம்பு மதிப்பு மில்லியனுக்கு 2 பகுதிகள் ஆகும். இது கண்ணீர் புகைகுண்டாகவும் அறியப்படுகிறது [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0017". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 2.3 Ludger Krähling, Jürgen Krey, Gerald Jakobson, Johann Grolig, Leopold Miksche “Allyl Compounds” Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. pg. 7-11 எஆசு:10.1002/14356007.a01_425
  3. Oliver Kamm and C. S. Marvel (1941). "Allyl alcohol". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0042. ; Collective Volume, vol. 1, p. 42
  4. Cohen, Julius (1900). Practical Organic Chemistry 2nd Ed. London: Macmillan and Co., Limited. p. 96.

இவற்றையும் காண்க

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைல்_ஆல்ககால்&oldid=3232482" இலிருந்து மீள்விக்கப்பட்டது