அல்காகொல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளத்தில் ஆல்காகொல்லியினைத் தெளித்தல்

அல்காகொல்லி (Algaecide) அல்லது பாசிக்கொல்லி அல்லது அல்காசைட் என்பது அல்காவைக் கொல்லவும் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் ஓர் உயிர்க்கொல்லி ஆகும். இது பெரும்பாலும் பொதுவான பொருளில் வரையறுக்கப்படுகிறது. உயிரியல் வரையறைக்கு அப்பால் அல்கா என்பதில் நீலப்பச்சைப்பாசியும் அடங்கும்.[1] ஒரு பாசிக்கொல்லியானது மேலாண்மை செய்யப்படும் நீர்நிலைகளில் (நீர்த்தேக்கங்கள், கோல்ப் குளங்கள், நீச்சல் குளங்கள்) பயன்படுத்தப்படலாம். ஆனால் டர்ஃப்கிராஸ் போன்ற இடங்களிலும் நிலத்திலும் பயன்படுத்தப்படலாம்.[2]

வகைகள்[தொகு]

கனிம கலவைகள்[தொகு]

சில கனிம சேர்மங்கள் பழங்காலத்திலிருந்தே அவற்றின் எளிமையின் காரணமாக அல்கா கொல்லியாகப் பயன்படுத்துவது அறியப்படுகின்றன.

வாற்கோதுமை வைக்கோல்[தொகு]

இங்கிலாந்தில் வாற்கோதுமை வைக்கோல், கண்ணி பைகளில் வைக்கப்பட்டு மீன் குளங்கள் அல்லது நீர் தோட்டங்களில் மிதக்க விடப்படுகிறது. இது குளத்தின் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் அல்கா வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. பார்லி வைக்கோல் ஒரு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. குளங்களில் பாசிக்கொல்லியாக இதன் செயல்திறனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்கள் பரிசோதித்தன. சோதனையின் முடிவுகள் அல்கா கொல்லியின் பயன்பாடு குறித்த ஒரு குறிப்பிட்ட முடிவினை தரவில்லை. வைக்கோல் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.[6]

அல்காகொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லி வண்ணப்பூச்சு கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படுகிறது

செயற்கை அல்காகொல்லிகள்[தொகு]

செயற்கையாக பயன்படுத்தப்படும் அல்காகொல்லிகள்

  • பென்சல்கோனியம் குளோரைடு – சவ்வுகளைத் தாக்கும் "குவாட்" கிருமிநாசினி
  • பெத்தோக்சின் – 2012-ல் "புதிய பரந்த பயன்பாடுடைய நுண்ணுயிர்க்கொல்லி",[7] 2022 "அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டது"
  • சைபுட்ரைன் – 2023 முதல் கப்பல் வண்ணப்பூச்சுகளில் தடை செய்யப்பட்டது
  • டிக்லோன் – குயினோன் பூஞ்சைக் கொல்லி/பாசிக்கொல்லி, மண்ணில் நிலைப்புத்தன்மையற்றது
  • டைகுளோரோபென் – முதுகெலும்பில்லாத விலங்குகள் மற்றும் பாக்டீரியாவையும் கொல்லும்
  • டையூரான் – களைக்கொல்லி/பாசிக்கொல்லி, ஒளிச்சேர்க்கையைத் தடுக்கிறது
  • எண்டோதல் – களைக்கொல்லி/பாசிக்கொல்லி, புரத பாஸ்பேடேசு 2ஏவினைத் தடுக்கிறது
  • பென்டின் – குயினோன் பூஞ்சைக் கொல்லி/பாசிக்கொல்லி, நிறுத்தப்பட்டது
  • ஐசோபுரோடுரான்– தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று யூரியா களைக்கொல்லி, நிறுத்தப்பட்டது
  • மெட்டாபென்ஸ்தியாசுரோன் – மாற்று யூரியா களைக்கொல்லி, நிறுத்தப்பட்டது
  • நபம் – புற்றுநோய் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பூஞ்சைக் கொல்லி/அல்காகொல்லி பயன்பாடு நிறுத்தப்பட்டது
  • ஆக்சிபுளோரோபென் – களைக்கொல்லி, "நீண்ட நீடித்த விளைவுகளுடன் நீர் வாழ் உயிரினங்களுக்கு மிகவும் நச்சுத்தன்மை உடையது"
  • பெண்டாக்ளோரோபீனைல் லாரேட்
  • குயினோகிளமைன் – களைக்கொல்லி/அல்காகொல்லி, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படவில்லை
  • குயினோனமிட்
  • சிமாசின் – களைக்கொல்லி/பாசிக்கொல்லி, ஒளிச்சேர்க்கையைத் தடுக்கிறது
  • டெர்புட்ரின்
  • தியோடோனியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Algae in Turf".
  2. "Stomping out algae".
  3. Van Hullebusch, E.; Chatenet, P.; Deluchat, V.; Chazal, P. M.; Froissard, D.; Lens, P. N.L.; Baudu, M. (2003). "Fate and forms of Cu in a reservoir ecosystem following copper sulfate treatment (Saint Germain les Belles, France)". Journal de Physique IV (Proceedings) 107: 1333–1336. doi:10.1051/jp4:20030547. 
  4. Martin, Hubert (1933). "Uses of Copper Compounds: Copper Sulfate's Role in Agriculture". Annals of Applied Biology 20 (2): 342–363. doi:10.1111/j.1744-7348.1933.tb07770.x. http://www.copper.org/applications/compounds/copper_sulfate02.html. பார்த்த நாள்: 2007-12-31. 
  5. Pesticide Research Institute for the USDA National Organic Program. "Hydrated Lime: Technical Evaluation Report". {{cite web}}: Missing or empty |url= (help)
  6. "Barley Straw for Algae Control". January 22, 2013. பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
  7. Chee, GL; Bhattarai, B; Daniel Gietz, R; Alrushaid, S; Nitiss, JL; Hasinoff, BB (15 February 2012). "Chemical reactivity and microbicidal action of bethoxazin.". Bioorganic & Medicinal Chemistry 20 (4): 1494–501. doi:10.1016/j.bmc.2011.12.051. பப்மெட்:22264763. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்காகொல்லி&oldid=3807059" இலிருந்து மீள்விக்கப்பட்டது