அலெப்போ பெரிய பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெப்போ பெரிய பள்ளிவாசல்
جامع حلب الكبير
Aleppo-Great-mosque-Alp.jpg
பள்ளிவாசலின் மினாரட்டு (சனவரி 2011இல்)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சிரியா அல்-ஜலோம் மாவட்டம், அலெப்போ, சிரியா
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைதற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
கட்டிடக்கலைப் பாணிமம்லுக்
நிறைவுற்ற ஆண்டு715, 13வது நூற்றாண்டு
அளவுகள்
குவிமாடம்(கள்)1
மினார்(கள்)1 (சிரிய எதிர்ப்புப் போராட்டங்களின்போது அழிக்கப்பட்டது)
பொருட்கள்கருங்கல்

அலெப்போ பெரிய பள்ளிவாசல் (அரபு மொழி: جامع حلب الكبير Jāmi‘ Halab al-Kabīr) அல்லது அலெப்போ உமாய்யது பள்ளிவாசல் (அரபு மொழி: جامع بني أمية بحلب Jāmi‘ al-Umawi al-Kabīr) சிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் தொன்மையான பள்ளிவாசல் ஆகும். உலகப் பாரம்பரியக் களமான இந்தப் பள்ளிவாசல் அலெப்போ பழைய நகரத்தில் அல்-ஜலோம் மாவட்டத்தில் அல்-மதீனா சவுக்கிற்கு நுழைவாயிலில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசலில் திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்காரியாவின் உடலடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.[1][2] துவக்கத்தில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் தற்போதைய கட்டடம் 11வதிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ளது. 1090இல் கட்டப்பட்ட மினார்,[3] சிரியா உள்நாட்டுப் போரின் போது ஏப்ரல் 24, 2013இல் அழிக்கப்பட்டது.[4]

காட்சிக்கூடம்[தொகு]

மேற் சான்றுகோள்கள்[தொகு]

  1. The Great Mosque of Aleppo Muslim Heritage.
  2. The Great Mosque (The Umayyad Mosque) பரணிடப்பட்டது 2019-05-13 at the வந்தவழி இயந்திரம் Syria Gate.
  3. ed. Mitchell, 1978, p. 231.
  4. "Syria clashes destroy ancient Aleppo minaret". bbc.co.uk (24 April 2013). பார்த்த நாள் 24 April 2013.

உசாத்துணைகள்[தொகு]