அலெப்போ பெரிய பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெப்போ பெரிய பள்ளிவாசல்
جامع حلب الكبير
பள்ளிவாசலின் மினாரட்டு (சனவரி 2011இல்)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சிரியா அல்-ஜலோம் மாவட்டம், அலெப்போ, சிரியா
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைதற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

அலெப்போ பெரிய பள்ளிவாசல் (அரபு மொழி: جامع حلب الكبيرJāmi‘ Halab al-Kabīr) அல்லது அலெப்போ உமாய்யது பள்ளிவாசல் (அரபு மொழி: جامع بني أمية بحلبJāmi‘ al-Umawi al-Kabīr) சிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் தொன்மையான பள்ளிவாசல் ஆகும். உலகப் பாரம்பரியக் களமான இந்தப் பள்ளிவாசல் அலெப்போ பழைய நகரத்தில் அல்-ஜலோம் மாவட்டத்தில் அல்-மதீனா சவுக்கிற்கு நுழைவாயிலில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசலில் திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்காரியாவின் உடலடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.[1][2] துவக்கத்தில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் தற்போதைய கட்டடம் 11வதிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ளது. 1090இல் கட்டப்பட்ட மினார்,[3] சிரியா உள்நாட்டுப் போரின் போது ஏப்ரல் 24, 2013இல் அழிக்கப்பட்டது.[4]

காட்சிக்கூடம்[தொகு]

மேற் சான்றுகோள்கள்[தொகு]

  1. The Great Mosque of Aleppo Muslim Heritage.
  2. The Great Mosque (The Umayyad Mosque) பரணிடப்பட்டது 2019-05-13 at the வந்தவழி இயந்திரம் Syria Gate.
  3. ed. Mitchell, 1978, p. 231.
  4. "Syria clashes destroy ancient Aleppo minaret". bbc.co.uk. 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.

உசாத்துணைகள்[தொகு]