அர்திக் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்திக் சிங்
Hardik Singh
தனித் தகவல்
பிறப்பு23 செப்டம்பர் 1998 (1998-09-23) (அகவை 25)
குசுரோப்பூர், ஜலந்தர் மாவட்டம்,
பஞ்சாப் (இந்தியா)[1]
உயரம்1.76 மீ[2]
விளையாடுமிடம்நடுக்களம்
தேசிய அணி
2014–இந்தியா, 21 வயதுக்குக் கீழ்4(0)
2018–இந்தியா23(1)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மசுக்கட்
Last updated on: 15 சூலை 2019

அர்திக் சிங் (Hardik Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 அன்று இவர் பிறந்தார். இந்திய வளைகோல் பந்தாட்ட தேசிய அணியில் அர்திக் ஓர் நடுக்கள ஆட்டக்காரராக விளையாடுகிறார்.[3] டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் ஓர் உறுப்பினராக அர்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பன்னாட்டு வாழ்க்கை[தொகு]

இந்திய இளையோர் அணியின் துணைத் தலைவரான பிறகு, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஆண்கள் வளைகோல் பந்தாட்ட வெற்றியாளர் கோப்பையில் அறிமுகமாகி மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாடத் தொடங்கினார். மேலும் 2018 ஆண்கள் வளைகோல் பந்தாட்ட உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் சிங்கின் தந்தை வரீந்தர்பிரீத் சிங் ரே இந்தியாவுக்காக விளையாடினார். மற்றும் தாத்தா பிரீதம் சிங் ரே இந்திய கடற்படையில் வளைகோல் பந்தாட்டப் பயிற்சியாளராக இருந்தார்.[4] தனது தந்தை மாமா மற்றும் முன்னாள் இந்திய இழுத்து-தாக்கும் ஆட்டக்காரர் இயுக்ராச் சிங்கையும் தனது வழிகாட்டியாக கருதுகிறார். இவரது அத்தை ராச்பீர் கவுரும் இந்தியாவுக்காக பன்னாட்டு அளவில் விளையாடியுள்ளார். அவரது கணவர் குர்மெயில் சிங் 1980 கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றார், அப்போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sahni, Jaspreet (21 November 2018). "Hockey World Cup: Hardik Singh - From ball boy to World Cup". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/hockey/hockey-world-cup/hockey-world-cup-hardik-singh-from-ball-boy-to-world-cup-player/articleshow/66705314.cms. பார்த்த நாள்: 14 July 2019. 
  2. "SINGH Hardik". www.worldcup2018.hockey. International Hockey Federation. Archived from the original on 15 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "HARDIK SINGH". hockeyindia.org. Hockey India. Archived from the original on 27 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Das, Tanmay (1 December 2018). "Hockey World Cup: ‘Home’ support for Hardik Singh". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/sport/hockey-world-cup/2018/dec/01/home-support-for-hardik-1905823.html. பார்த்த நாள்: 14 July 2019. 
  5. "Vice-captain Hardik Singh is fifth in family to win laurels in hockey". The Tribune. 1 October 2016. https://www.tribuneindia.com/news/jalandhar/vice-captain-hardik-singh-is-fifth-in-family-to-win-laurels-in-hockey/303607.html. பார்த்த நாள்: 14 July 2019. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்திக்_சிங்&oldid=3927241" இலிருந்து மீள்விக்கப்பட்டது