அரைவல் (திரைப்படம்)
Arrival | |
---|---|
![]() U.S. theatrical release poster | |
இயக்கம் | டெனிசு வில்லெனுவ் |
மூலக்கதை | "Story of Your Life" படைத்தவர் டெட் சியாங்கு |
திரைக்கதை | எரிக் ஹெஸ்செரர் |
இசை | ஜோஹான் ஜொஹான்சன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பிராடுபோர்டு யங் |
படத்தொகுப்பு | ஜோ வால்கர் |
விநியோகம் | |
வெளியீடு | செப்டம்பர் 1, 2016(வெனிசு) நவம்பர் 11, 2016 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 116 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $47 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $203.4 மில்லியன்[3] |
அரைவல்( தமிழ் : வருகை )வருகை is a 2016 அமெரிக்க அறிவியல் புனைகதை திரைப்படம் ஆகும் .இந்தத் திரைப்படம் 1988 ல் எரிக் ஹெய்சரர் எழுதிய ஸ்டோரி ஆப் யுவர் லைப் (தமிழ் : உன்னுடைய வாழ்க்கையின் கதை ) என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டது.
கதை சுருக்கம்[தொகு]
பூமியின் மேற்பரப்பில் புதிதாக 12 வேற்றுகிரக விண்கலங்கள் போன்ற அமைப்புகள் உருவாகின்றன .இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் ஜி டி வெபர் இந்த வேற்றுகிரக விண்கலங்கள் வந்ததற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறார் ..இந்த முயற்சியில் ஆராய்ச்சி குழுவில் இருக்கும் டாக்டர் அயான் டொன்னேல் மற்றும் லூயிஸ் பாங்ஸ் அந்த வேற்றுகிரகத்தினர் பேச முயற்சிக்கும் வட்ட வடிவத்தில் உள்ள சமிக்ஞை எழுத்து வடிவ மொழியின் மூலமாக வேற்றுகரகத்தினர் சொல்லவருவதை புரிந்துகொள்ள மொழிப்பெயர்ப்பு செய்ய எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை .லூயிஸ் பாங்ஸ் பெருமுயற்சிக்கு பின்னர் அந்த விண்கலத்தில் இருக்கும் வேற்றுலகதினரின் தனிப்பட்ட மொழியை லூயிஸ் மொழிபெயர்க்கும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் வட்டவடிவ எழுத்து சங்கேத மொழியில் சொல்லப்பட்ட வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படும்போது போர் உருவாக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிறது இருந்தாலும் இந்த முயற்சிகளின் முடிவில் அந்த வேற்றுகிரகத்தினர் காலங்களை கடந்து கடந்தகால மற்றும் எதிர்கால சம்பவங்களை அறியக்கூடிய சக்திகள் உள்ளவர்கள் என்றும் , 3000 ஆண்டுகளுக்கு பின்னால் அவர்களுக்கு பூமியில் இருப்பவர்களின் உதவி தேவைப்படுவதை சொல்லவும் வந்துள்ளனர் என்பதை லூயிஸ் அறிகிறார் , எதிர்கால சம்பவங்களை அவர்களின் சக்திகள் மூலமாக அறிந்துகொண்டு போர் நடக்காமல் தடுக்கிறார் . பின்னர் அந்த 12 விண்கலன்களும் மறைந்து செல்கின்றன.
வசூல்[தொகு]
இந்த திரைப்படம் 203.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை உலகம் முழுவதும் வசூலாக குவித்தது .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Arrival (12A)". British Board of Film Classification. September 19, 2016. September 19, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;preview
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Arrival (2016)". பாக்சு ஆபிசு மோசோ. July 16, 2017 அன்று பார்க்கப்பட்டது.