அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா
گورنمنٹ کالج خواتین بارہ مولہ | |
வகை | அரசு இளங்கலை மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1986 |
சார்பு | காசுமீர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | முனைவர் ஃபஹ்மிதா பானு |
அமைவிடம் | பாரத ஸ்டேட் வங்கி
எதிரில் , , , 193101 12°30′52″N 75°01′28″E / 12.514577°N 75.024498°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், உருது, காஷ்மீரி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
பாரமுல்லா மகளிர் கல்லூரி என்று பரவலாக அழைக்கப்படும் பாரமுல்லா அரசு மகளிர் கல்லூரி என்பது ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா நகரில் 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவினால் தன்னாட்சிக் கல்லூரி என அங்கீகரிக்கப்பட்டுள்ள மகளிர் கல்லூரி ஆகும்.[1] காஷ்மீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]
இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் "பி" தர மதிப்பீடு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கம்
[தொகு]ஜம்மு-காஷ்மீரின் அப்போதைய முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சிக்காலத்தில் 1986 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப்புறங்களில் உள்ள பெண் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அம்மாநில அரசு இந்த கல்லூரியை நிறுவியது.
அமைவிடம்
[தொகு]இந்த பாரமுல்லா மகளிர் கல்லூரியானது தேசிய நெடுஞ்சாலை சாலை NH1A யில், அம்மாநில கோடைக்கால தலைநகரான சிறீநகரில் இருந்து வடமேற்கே 54 கி. மீ. தொலைவில் உள்ள பாரமுல்லா மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. [3] இது பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனமாகும்.
படிப்புகள்
[தொகு]- இளங்கலை கலை
- இளங்கலை அறிவியல் (மருத்துவம்)
- இளங்கலை அறிவியல் (மருத்துவம் அல்லாத)
- வணிகவியல் இளங்கலை
- கணினி பயன்பாடுகளில் இளங்கலை [4]
இது தவிர, தரவு பராமரிப்பு மேலாண்மை, தரவு செயலாக்க மேலாண்மை மற்றும் பட்டு வளர்ப்பு போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கூடுதல் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Empowering Women". பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
- ↑ "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".
- ↑ "Govt. Degree College For Women, Baramullah, Kmr. Baramula - Jammu And Kashmir". பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
- ↑ "Government Degree College For Women, Baramulla | Educrib". பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.