அரசியலமைப்புச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரசியல் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரசியலமைப்புச் சட்டம் அல்லது அரசியற்சட்டம் (constitution) என்பது, ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல ஆவணம் ஆகும். இது ஒரு அரசின் முறைமைகளை விளக்குகிறது. நாடுகளைப் பொறுத்தவரை இச் சொல், அரசின் அடிப்படை அரசியல் கொள்கைகள், அமைப்பு, செயல்முறைகள், அதிகாரம், கடமைகள் என்பவற்றை வரையறுக்கும் தேசிய அரசியல் சட்டத்தைக் குறிக்கின்றது. பல நாடுகளின் அரசியல் சட்டங்கள் மக்களுக்கான உரிமைகள் சிலவற்றுக்கான உறுதிகளையும் வழங்குகின்றன. தற்காலப் பாணியிலான எழுதித் தொகுக்கப்பட்ட அரசியற்சட்டங்கள் உருவாவதற்கு முன்னர், அரசு செயல்படுவதற்கான எந்தச் சட்டத்தையும் இச் சொல் குறித்தது.

அரசியலமைப்புச் சட்டங்கள் பலவகையான அரசியல் அமைப்புக்கள் தொடர்பானவையாக உள்ளன. இவை, பன்னாட்டு அளவிலும், கூட்டாட்சி, மாநிலம் அல்லது மாகாணம் ஆகிய மட்டங்களிலும் காணப்படுகின்றன.