அய்னான் முயல்
அய்னான் முயல் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பாலூட்டி |
Order: | லகோமோர்பா |
Family: | லெபோரிடே |
Genus: | முயல் |
இனம்: | L. hainanus |
இருசொற் பெயரீடு | |
Lepus hainanus ஸ்வின்ஹோ, 1870 | |
![]() | |
அய்னான் முயல் பரவல் |
அய்னான் முயல் (ஆங்கிலப்பெயர்: Hainan Hare, உயிரியல் பெயர்: Lepus hainanus) என்பது சீனாவின் அய்னான் தீவில் காணப்படும் ஒருவகை முயல் இனம் ஆகும்.
விளக்கம்[தொகு]
இது ஒரு சிறிய முயல் இனம் ஆகும். இதன் உடலின் நீளம் 40 சென்டிமீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. இதன் எடை வெறும் 1.5 கிலோகிராம் ஆகும். இதன் தலை சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும். இது நீளமான காதுகளை கொண்டிருக்கும். இதன் காதுகளின் நீளமானது இதன் பின்னங்கால்களின் நீளத்தை விட அதிகம். வாலின் மேல் பகுதி கருப்பு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். மற்ற பெரும்பாலான முயல்களை விட இதன் ரோமமானது பல வண்ணங்களில் காணப்படும். இதன் முதுகு பழுப்பான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், வயிறு வெள்ளை நிறத்திலும், பக்கவாட்டு ரோமங்கள் பழுப்பான மஞ்சள் மற்றும் பழுப்பான வெள்ளை நிறங்களின் கலவையாகவும், மற்றும் இதன் கால்கள் அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
உசாத்துணை[தொகு]
- ↑ Smith, A.T.; Johnston, C. (2016). "Lepus hainanus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T11793A45177783. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T11793A45177783.en. http://www.iucnredlist.org/details/11793/0. பார்த்த நாள்: 27 December 2017.