அயோடோபென்சீன் இருகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடோபென்சீன் இருகுளோரைடு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோ(பீனைல்)-λ3-அயோடேன்
வேறு பெயர்கள்
அயோடோசோபென்சீன் இருகுளோரைடு; பீனைலயோடின்(III) இருகுளோரைடு; பீனைலயோடோ இருகுளோரைடு; பீனைலயோடோசோ குளோரைடு; பீனைல்குளோரோ அயோடினியம் குளோரைடு ; இருகுளோரோ அயோடோபென்சீன்; அயோடோயிருகுளோரோபென்சீன்.
இனங்காட்டிகள்
932-72-9 Y
Abbreviations IBD
ChemSpider 254526
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13166207
SMILES
  • Cl[I](c1ccccc1)Cl
UNII 0IJ835PQB7 Y
பண்புகள்
C6H5Cl2I
வாய்ப்பாட்டு எடை 274.91 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 2.2 கி/செ.மீ3
உருகுநிலை 115 முதல் 120 °C (239 முதல் 248 °F; 388 முதல் 393 K) (சிதைவடையும்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அயோடோபென்சீன் இருகுளோரைடு (Iodobenzene dichloride) என்பது C6H5Cl2I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். சுருக்கமாக (PhICl2) என்ற வாய்ப்பாட்டல் இச்சேர்மம் எழுதப்படுகிறது. குளோரின் கொண்ட அயோடோபென்சீனின் அணைவுச் சேர்மமாக அயோடோபென்சீன் இருகுளோரைடு பார்க்கப்படுகிறது. கரிம வேதியியலுக்கான வினையாக்கியாக இது ஓர் ஆக்சிகரணியாகவும் குளோரினேற்ற முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.

வேதிக் கட்டமைப்பு[தொகு]

ஒற்றை-படிக எக்சுகதிர் படிகவியல் இதன் கட்டமைப்பை தீர்மானிக்க பயன்படுத்தப்பட்டது. மத்திய அயோடின் அணுவை முன்வைத்து T-வடிவ வடிவவியலை ஏற்றுக்கொள்கிறது என வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையின் மூலம் கணிக்க முடியும்.[2]

தயாரிப்பு[தொகு]

அயோடோபென்சீன் இருகுளோரைடு நிலைப்புத் தன்மை கொண்டதல்ல என்பதால் பொதுவாக வணிக ரீதியாக கிடைக்காது. குளோரோஃபார்மில் கரைக்கப்பட்ட அயோடோபென்சீனின் கரைசல் வழியாக குளோரின் வாயுவை அனுப்புவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இக்கரைசலில் இருந்து வீழ்படிவாக அயோடோபென்சீன் இருகுளோரைடு கிடைக்கிறது.[3] இதே எதிர்வினை வழிகாட்டும் தொழிற்சாலை அளவிலும் (20 கிலோ) பதிவாகியுள்ளது.[4]

Ph-I + Cl2 → PhICl2

ஐதரோகுளோரிக் அமிலத்தின் மீது சோடியம் ஐப்போகுளோரைட்டின் செயல்பாட்டின் மூலம் அமைவிடச் சூழலில் உருவாக்கப்பட்ட குளோரினின் உபயோகத்தை உள்ளடக்கிய ஒரு மாற்று தயாரிப்பு முறையும் விவரிக்கப்படுகிறது.[5]

வினைகள்[தொகு]

அயோடோபென்சீன் டைகுளோரைடை காரக் கரைசல்களைக் கொண்டு நீராற்பகுப்பு செய்தால் அயோடோசோபென்சீனும் (PhIO) [6] சோடியம் ஐப்போகுளோரைட்டால் ஆக்சிசனேற்றம் செய்தால் அயோடாக்சிபென்சீனும் (PhIO2) உருவாகின்றன.[7]

கரிமத் தொகுப்பு வினைகளில் அயோடோபென்சீன் இருகுளோரைடு ஆல்கீன்கள்[1] மற்றும் ஆல்க்கைன்களின்[8] தேர்ந்தெடுக்கப்பட்ட குளோரினேற்றத்திற்கான வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Phenyliodine(III) Dichloride, David W. Knight and Glen A. Russell, in Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, John Wiley & Sons, Ltd எஆசு:10.1002/047084289X.rp071
  2. E. M. Archer and T. G. van Schalkwy (1953). "The crystal structure of benzene iododichloride". Acta Crystallogr. 6: 88–92. doi:10.1107/S0365110X53000193. 
  3. H. J. Lucas and E. R. Kennedy (1942). "Iodobenzene dichloride". Organic Syntheses 22: 69. doi:10.15227/orgsyn.022.0069. 
  4. Zanka, Atsuhiko; Takeuchi, Hiroki; Kubota, Ariyoshi (1998). "Large-Scale Preparation of Iodobenzene Dichloride and Efficient Monochlorination of 4-Aminoacetophenone". Organic Process Research & Development 2 (4): 270. doi:10.1021/op980024e. 
  5. Zhao, Xue-Fei; Zhang, Chi (2007). "Iodobenzene Dichloride as a Stoichiometric Oxidant for the Conversion of Alcohols into Carbonyl Compounds; Two Facile Methods for Its Preparation". Synthesis 2007 (4): 551. doi:10.1055/s-2007-965889. 
  6. H. J. Lucas, E. R. Kennedy, and M. W. Formo (1942). "Iodosobenzene". Organic Syntheses 22: 70. doi:10.15227/orgsyn.022.0070. 
  7. M. W. Formo, John R. Johnson (1942). "Iodoxybenzene: B. Hypochlorite oxidation of iodobenzene dichloride". Organic Syntheses 22: 72. doi:10.15227/orgsyn.022.0072. 
  8. Michael E. Jung and Michael H. Parker (1997). "Synthesis of Several Naturally Occurring Polyhalogenated Monoterpenes of the Halomon Class". Journal of Organic Chemistry 62 (21): 7094–7095. doi:10.1021/jo971371. பப்மெட்:11671809. 

மேலும் வாசிக்க[தொகு]