அயோடோபென்சீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடோபென்சீன்
| |||
வேறு பெயர்கள்
பீனைல் அயோடைடு
| |||
இனங்காட்டிகள் | |||
591-50-4 | |||
ChEMBL | ChEMBL116296 | ||
ChemSpider | 11087 | ||
DrugBank | DB02252 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 11575 | ||
| |||
பண்புகள் | |||
C6H5I | |||
வாய்ப்பாட்டு எடை | 204.01 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.823 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −29 °C (−20 °F; 244 K) | ||
கொதிநிலை | 188 °C (370 °F; 461 K) | ||
கரையாது | |||
மட. P | 3 | ||
-92.00•10−6 செ.மீ3/மோல் | |||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 74.44 °C (165.99 °F; 347.59 K) | ||
வெப்பவேதியியல் | |||
வெப்பக் கொண்மை, C | .779 யூல்/கிராம் கெல்வின் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அயோடோபென்சீன் (Iodobenzene) என்பது C6H5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன் வளையத்தில் ஓர் அயோடின் அணு பதிலீடு செய்யப்பட்டிருந்தால் அது அயோடோபென்சீன் என்பபடுகிறது. கரிம வேதியியலில் ஒரு செயற்கை இடைநிலையாக அயோடோபென்சீன் மிகுதியான பயன்களை அளிக்கிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் எளிதில் ஆவியாகக் கூடியதாகும். நாட்பட்ட அயோடோபென்சீன் மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
தயாரிப்பு
[தொகு]வர்த்தக முறையிலும் அயோடோபென்சீன் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால் ஆய்வகத்தில் அனிலீனின் சேன்ட் மேயர் வினையின் வழியாக இது தயாரிக்கப்படுகிறது. முதல் படிநிலையில் அமீன் வேதி வினைக்குழுவானது ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் சோடியம் நைட்ரைலுடன் சேர்க்கப்பட்டு ஈரசோனியமாக்கப்படுகிறது. உருவாகும் பீனைல் ஈரசோனியம் குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது. இதனால் நைட்ரசன் வாயு வெளியேற்றப்படுகிறது. நீராவி வடித்தல் மூலம் அயோடோபென்சீன் பிரித்தெடுக்கப்படுகிறது [1]
பென்சீனுடன் அயோடின் மற்றும் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆவிமீட்சி வினைக்கு உட்படுத்தி மாற்று வழிமுறையிலும் இதைத் தயாரிக்கலாம்[2].
வினைகள்
[தொகு]C–Br அல்லது C–Cl பிணைப்புகளைக் காட்டிலும் C–I பிணைப்பு வலிமை குறைந்தது என்பதால் புரோமோபென்சீன் அல்லது குளோரோபென்சீன்களைக் காட்டிலும் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது. அயோடோபென்சீன் மக்னீசியத்துடன் விரைந்து வினைபுரிந்து பீனைல்மக்னீசியம் அயோடைடு கிரிக்கனார்டு வினைப்பொருளாக உருவாகிறது. பீனைல்மக்னீசியம் புரோமைடு போலவே பீனைல்மக்னீசியம் அயோடைடும் பீனைல் எதிர்மின் அயனி சிந்தோனுக்கான செயற்கை சேர்மமாகக் கருதப்படுகிறது. அயோடோபென்சீன் குளோரினுடன் வினைபுரிந்து அயோடோபென்சீன் டைகுளோரைடு என்ற அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது [3]. இது திட குளோரினுக்கான மூலப்பொருளாகும்.
சோனோகேசிரா பிணைப்பு, எக் வினை மற்றும் பிற உலோக வினையூக்கி பிணைப்புகள் போன்ற வினைகளிலும் ஒரு தளப்பொருளாக அயோடோபென்சீன் செயல்படுகிறது. இவ்வினைகள் அயோடோபென்சீனின் ஆக்சிசனேற்ற கூட்டுமுறை வழியாக நிகழ்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ H. J. Lucas, E. R. Kennedy (1939). "Iodobenzene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0351.; Collective Volume, vol. 2, p. 351
- ↑ F. B. Dains and R. Q. Brewster (1941). "Iodobenzene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0323.; Collective Volume, vol. 1, p. 323
- ↑ H. J. Lucas and E. R. Kennedy. "Iodobenzene dichloride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0482.; Collective Volume, vol. 3, p. 482