அம்மன் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்மன்
அம்மன் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைபக்தி
காதல்
நாடகம்
எழுதியவர்சாய் ராம் சிவகுமார்
இயக்குனர்ரவி பிரியன்
நடிப்பு
 • பவித்ரா
 • அமல்ஜித்
 • ஜென்னிபர்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஐ. அஹ்மத்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 சனவரி 2020 (2020-01-27) –
ஒளிபரப்பில்

அம்மன் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 27 ஜனவரி 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை ஐ. அஹ்மத் என்பவர் தயாரிக்க, ரவி பிரியன் என்பவர் இயக்கியுள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பவித்ரா நடிக்க இவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் என்பவர் நடிக்கின்றார்.[3][4]

தெய்வ சக்தி மூலம் வாக்கு சொல்லும் சக்தி என்ற பெண்ணும், தெய்வ வாக்கை நம்பாத ஊருக்கு புதிதாக வரும் வைத்தியர் இருவரையும் சேர்ந்து வைக்க விதி செய்யும் சதி என்ன என்பது தான் கதை.

கதை சுருக்கம்[தொகு]

அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியைச் சுற்றி கதை நகர்கின்றது.

எதிர்காலத்தை முன்னறிவிக்கும் அம்மன் அருள் கொண்டு சக்தி என்ற இளம் பெண். இவளின் தனித்துவமான திறமையால் அந்த கிராமமே அம்மனின் அவதாரம் என போற்றி வணங்கி வருகின்றனர். அதே ஊரில் மருத்துவராக இருக்கும் ஈஸ்வர் கிராம மக்களின் மூட நம்பிக்கையை நம்பாத இவன் சக்தி போலித்தனத்தை வெளிக்காட்ட முயற்சிக்கும் தருணத்தின் இருவரும் விதியின் சதியால் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு ஊரும் உறவும் ஏற்குமா? இல்லை எதிர்க்குமா? என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

 • பவித்ரா - சக்தி
  • அம்மன் அருளால் வாக்கு சொல்லும் பெண். இவளை ஊரே தெய்வமாக பார்த்தாலும் இவள் தங்க கூண்டுக்குழை சிக்கி இருக்கிற கிளி தான் என்பது யாருக்குமே தெரியாது.
 • அமல்ஜித் - ஈஸ்வர்
  • ஒரு வைத்தியர். கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.
 • ஜென்னிபர் - சாரதா
  • இந்த தொடரின் வில்லி, சக்தியின் அக்கா, என்னதான் சக்தியின் சொல்லுக்கு ஊரே கட்டுப்பட்டாலும் இவளின் கண் அசைவுக்கு சக்தியே கட்டுப்படுவாள்.
 • ஷாலி - லோகம்மாள்
  • வில்லி கதாபாத்திரம், சக்தி வாக்கு சொன்னால் எல்லாமே பலிக்கும் ஆனால் வாக்கு மட்டும் தான் அவளுடையது நாக்கு இவளுடையது.
 • லாவண்யா - இன்பா
 • ஜீவா

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள்
Previous program அம்மன்
(27 சனவரி 2020 - ஒளிபரப்பில்)
Next program
நாகினி -