சில்லுனு ஒரு காதல் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்லுனு ஒரு காதல்
வகைகாதல்
நாடகத் தொடர்
உருவாக்கம்அஹமத்
எழுத்துசெல்வம் கந்தசாமி
வசனம்
ரதிபராதி
வசன உதவி
நாகையா
இயக்கம்சுரேஷ் சண்முகம்
நடிப்பு
 • சமீர் அஹமத்து
 • தர்ஷினி
பிண்ணனி இசைஜேம்ஸ் விக்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நிரோஷா
ஒளிப்பதிவுபாலா குருநாதன்
ஒளிப்பதிவு இயக்குனர்
அகிலன் கல்யாண்
தொகுப்புச. கேமாகுமார்
மரியா ஜோசப்
ராகேஷ் ரங்கராஜ்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மெராக்கி பிலிம் ஒர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ்
ஒளிபரப்பான காலம்4 சனவரி 2021 (2021-01-04) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்ராஜா ராணிச்சி கா ஜோடி
(மராத்தி)

சில்லுனு ஒரு காதல் என்பது சனவரி 4, 2021 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3][4][5] இது கலர்ஸ் மராத்தி மொழித் தொடரான 'ராஜா ராணிச்சி கா ஜோடி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக 'சமீர் அஹமத்து' என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு 'தர்ஷினி' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[6][7]

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை கிராமத்தை சேர்த்த கயல்விழி என்ற துடிதுடிப்பன் இளம் பெண்ணான கயல், போலீஸ் வேலை தான் கெத்து அதுதான் சிறந்தது என்று கருதிகிறாள். ஒரு இளம் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான சூர்யா குமார் என்பவரை சந்திக்கிறாள், அவரை பார்த்த நொடியில் இருந்து அவர் மீது காதல் வசப்படுகின்றார்.

அதன்பிறகு அவரோடு தொடர்ந்து இருப்பதற்காக தளராத விடாமுயற்சியையும், தேடலையும் மேற்கொள்ளும் கயல் தனது தீவிர முயற்சியில் வெற்றி கண்டு கயல்விழியை சூர்யகுமார் திருமணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை காதலும் பரபரப்பும் நிறைந்த திருமண வாழ்க்கையாக அமைகிறது.

இது ஒரு துடிப்பானஇளம் வயது பெண்ணிற்கும் ஒரு இளம், நேர்மையான போலீஸ் அதிகாரியான சூர்யாவுக்கும் இடையே நிகழும் தினசரி சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை அழகான காதல் வடிவில் இது சித்தரிக்கிறது.[8]

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • சமீர் அஹமத்து - 'ஐபிஎஸ்' சூர்யா குமார்
  • ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி.
 • தர்ஷினி - கயல்விழி
  • சுட்டித்தனம் நிறைந்த பெண்.

துணை கதாபாத்திரம்[தொகு]

 • சம்யுதா கிரண் -
 • ஸ்ரீலதா - கல்யாணி
 • பரதுஷா -

நடிகர்களின் தேர்வு[தொகு]

இது ஒரு காதல்தொடர் ஆகும்.[9] இந்த தொடரில் புதுமுக நடிகரான 'சமீர் அஹமத்து' என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் 2019 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு என்ற போட்டியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[10] இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள்.

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sillunu Oru Kaadhal to premiere on January 4". timesofindia.indiatimes.com.
 2. "Sillunu Oru Kaadhal(Colors Tamil) Serial". cinesettai.in.
 3. "Paavam Ganesan to Sillunu Oru Kaadhal: Tamil TV shows to expect in 2021last=". timesofindia.indiatimes.com.
 4. "last=". www.afaqs.com. Missing pipe in: |title= (உதவி)
 5. "Colors Tamil brings two new shows this new year last=". bestmediainfo.com. Missing pipe in: |title= (உதவி)
 6. "Sameer Ahamathu, Dharshani's Sillunu Oru Kaadhal is a new-age romantic drama". timesofindia.indiatimes.com.
 7. "Sillunu Oru Kadhaal Serial On Colors Tamil Channel Launching 4th January 2021". indiantvinfo.com.
 8. "2021 ஆம் ஆண்டை ஜில்லாக்கும் புதிய நெடுந்தொடர்… "சில்லுனு ஒரு காதல்" கலர்ஸ் தமிழில் !last=". tamil.filmibeat.com.
 9. "சில்லுனு ஒரு காதல்.. புதிய காதல் கதை நெடுந்தொடரின் ப்ரோமோ வெளியீடு..last=". tamil.news18.com.
 10. "Sameer Ahamathu, Darshini Gowda and Syamantha Kiran all excited about newly launched show Sillunu Oru Kaadhallast=". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சில்லுனு ஒரு காதல்
(4 சனவரி 2020 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
உயிரே
(2 சனவரி 2020 - 2 சனவரி 2021)
-