அம்பராவா ரயில்வே அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பராவா ரயில்வே அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது{{{established}}}
அமைவிடம்{{{location}}}


அம்பராவா ரயில்வே அருங்காட்சியகம் (Ambarawa Railway Museum), இந்தோனேஷியாவில் மத்திய ஜாவாவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியன் ரயில்வே நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக இந்தோனேஷியன் ரயில்வே அருங்காட்சியகம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அருங்காட்சியகம் நீராவி என்ஜின்களை சேகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, Ambarawa உள்ள . இந்த அருங்காட்சியகம் 3 அடி 6 அங்குல (1,067 மிமீ) நீளமுள்ள மூடப்பட்ட ரயில் பாதையின் எச்சங்களைக் கொண்டுள்ளது.

அருங்காட்சியக கட்டிடம் மற்றும் அமைவிடம்[தொகு]

டச்சு காலனித்துவ அரசாங்கத்தின் போது அம்பராவா ஒரு இராணுவ நகரமாக இருந்தது. முதலாம் வில்லெம் மன்னர் தனது படையினரை செமரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஒரு புதிய ரயில் நிலையத்தைக் கட்டுவதற்கு உத்தரவு வழங்கினார். மே 21, 1873 ஆம் நாளன்று அம்பராவா ரயில் நிலையம் 127,500 மீ² நிலத்தில் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் இந்த ரயில் நிலையமானது முதலாம் வில்லெம் ஸ்டேஷன் என்று அழைக்கப்பட்டது.[1] இது கேதுங்ஜாட்டி-பிரிங்கின்-டன்டாங்-அம்பராவா தடம் கட்டப்பட்ட அதே நேரத்தில் முடிக்கப்பட்டது.

இந்த ஸ்டேஷனானது கட்டிடம் காத்திருப்பு அறை மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அறை என்ற நிலையில் அமைந்த இரண்டு முக்கிய கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

முதலாம் வில்லெம் ரயில் நிலையம் முதலில் கேதுங்ஜதியிலிருந்து வடகிழக்குப் பகுதி வரை 4 அடி 8.5 அங்குலம் (1,435 மிமீ) அகல இடைவெளியினைக் கொண்டும், தெற்கே மாகேலாங் வழியாக யோககர்த்தாவை நோக்கி 3 அடி 6 அங்குலம் (1,067 மிமீ) அகல இடைவெளியினைக் கொண்டும், அமைந்த தண்டவாளங்களைக் கொண்ட போக்குவரத்து இடமாக இருந்தது. அந்த ரயில்வே நிலையத்தில் இரு பக்கங்களிலும் வெவ்வேறு அளவு அகல இடைவெளியைக் கொண்ட தண்டவாளங்களில் ரயில்கள் ஓடும் வகையில் அதற்கு ஏற்றவாறு அமைந்திப்பதைக் காண முடியும்.[2]

ஏப்ரல் 8, 1976 ஆம் நாள் அன்று, அப்போது மத்திய ஜாவா மாகாண ஆளுநராக இருந்த சுபர்ட்ஜோ ரஸ்டாம் என்பவரால் அம்பராவா ரயில் நிலையம் அதிகாரப்பூர்வமாக அம்பராவா ரயில் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டது. பயன்பாட்டிலிருந்து முடிவிற்கு வந்த 3 அடி 6 அங்குலம் (1,067 மிமீ) பாதையில் ஓடிய ரயிலின் நீராவி என்ஜின்களை இந்த அருங்காட்சியகம் பாதுகாக்கின்றது. பின்னர் அந்த இந்தோனேசிய மாநில ரயில்வேயின் பாதை ரயில்வே பயன்பாடு இன்றி மூடப்பட்டது. இவை ரயில் நிலையத்திற்கு அடுத்த திறந்தவெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

2010 ஆம் ஆண்டில், அம்பராவா ரயில்வே அருங்காட்சியகத்தின் கட்டிடம் பாரம்பரிய கட்டிடமாக மாற்றப்பட்டது.[3][4]

ரயில் பாதை[தொகு]

மாகெலாங் நிலையத்தையும் முதலாம் வில்லெம் நிலையத்தையும் இணைக்கும் 1067 மிமீ ரயில் பாதை, இப்போது ஒரு அருங்காட்சியகமாக உள்ளது.

யோகியாகர்த்தாவை (தென் மேற்கு அம்பராவாவில் இருந்து) 3 அடி 6 அங்குலம் (1,067 மிமீ) இடைவெளி கொண்ட பாதையில் ரயில் இயங்கும்போது ஆர்வமூட்டுபவனவதான அனுபவம் கிடைக்கும். ஜாவாவில் ஜம்பு மற்றும் செகாங்கு ஆகிய பகுதிகளுக்கு இடையில் மட்டுமே இவ்வகையான ரயில் பிரிவு அமைந்து இயங்கி வந்தது. பூகம்பத்தில் சேதமடைந்த காரணத்தால் பெடனோவிற்கு அப்பால் உள்ள பாதை 1970 களின் ஆரம்பத்தில் மூடப்பட்டது. அதையொத்த இணை சாலையில் நடந்த பேருந்துப் போக்குவரத்தின் காரணமாக அது தன் அதன் பெரும்பாலான போக்குவரத்தை இழந்துவிட்டிருந்தது. கேதுங்ஜதியிலிருந்து (ஆரம்பத்தில் அம்பராவாவிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும்) செல்லும் பாதை 1970 களின் நடுப்பகுதி வரை தப்பிப் பிழைத்திருந்தது, ஆனால் கடைசியில் மிகக் குறைவான போக்குவரத்தைக் கண்டது. ஏனெனில் செமரங்கிற்குச் செல்லும் சாலையில் நேரடியாகப் பயணிப்பது மிக விரைவாக இருந்தது.[2]

தற்போது, நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் அம்பராவா-பெடோனோ இடையே பாரம்பரிய ரயில்வே இயக்கப்படுகிறது. கூடுதலாக, அம்பராவாவிற்கும் டன்டாங்கிற்கும் இடையே சுற்றுலாப்போக்குவரத்து ரயில்வே செயல்பாட்டில் உள்ளது.

சேகரிப்பு[தொகு]

இந்த அருங்காட்சியகம் தற்போது 21 நீராவி என்ஜின்கள் சேகரித்து வைத்துள்ளது. தற்போது அவற்றில்நான்கு என்ஜின்கள் செயல்படும் நிலையில் உள்ளன.. அருங்காட்சியகத்தின் மற்ற சேகரிப்புகளில் பழைய தொலைபேசிகள், மோர்ஸ் தந்தி உபகரணங்கள், பழைய மணிகள் மற்றும் சமிக்ஞை உபகரணங்கள் மற்றும் சில பழங்கால தளவாடங்கள் உள்ளிட்ட பல காட்சிப்பொருள்கள் அடங்கும்.[2]

சில நீராவி என்ஜின்கள் 2 B25 வகுப்பினைச் சேர்ந்த 0-4-2RT B2502 மற்றும் B2503 ஆகும். இவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் இந்த பாதைக்கு வழங்கப்பட்டவையாகும். (மூன்றாவது லோகோமோட்டிவ், பி 2501, நகரத்தின் அருகிலுள்ள ஒரு பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுள்ளது). E10 வகுப்பினைச் சேர்ந்த 0-10-0RT E1060 முதலில் ஆரம்பத்தில் மேற்கு சுமத்ராவிற்கு 1960 களில் வழங்கப்பட்டது. நிலக்கரி ரயில்வேயின் பயன்பாட்டிற்காக அது வழங்கப்பட்டது. அது பின்னர் ஜாவாவிற்கு கொண்டு வரப்பட்டு மறுபடியும் சவாக்லுன்டோவிற்குத் திரும்பியது. வழக்கமான 2-6-0T C1218 என்ஜின் 2006 ஆம் ஆண்டில் சரியான பணியாற்றும் நிலைக்கு சீர்செய்து வைக்கப்பட்டது. பின்னர் அதுசோலோவுக்கு சுற்றுலா ரயிலாக மாற்றப்பட்டு, அப்பணியினை மேற்கொண்டது. அந்த சுற்றுலா ரயிலுக்கு செபூர் குளுதுக் ஜலதாரா என்று பெயர் சூட்டப்பட்டது.[2] இந்த அருங்காட்சியகத்தில் ஒரு சிறிய டீசல் ஷண்டர் D300 வகுப்பினைச் சேர்ந்த 0-8-0D D300 23 இங்கு உள்ளது, ஆரம்பத்தில் அது செபுவில் இருந்த செமரங்கில் இருந்து வந்த ஒரு பழைய UH-295 கிரேன் மற்றும் புதிதாக மீட்டெடுக்கப்பட்ட B51 வகுப்பினைச் சேர்ந்த 4-4-0 B5112 அம்பராவா-டன்டாங் பாதைக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டதாகும். இங்குள்ள பிற லோகோமோட்டிவ் சேகரிப்புகள் C1240, C1603, C2821 மற்றும் CC5029 ஆகியவை ஆகும்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "About the Ambarawa Railway Museum". internationalsteam.co.uk (2010).
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "The Ambarawa Railway Museum". internationalsteam.co.uk (2010).
  3. 3.0 3.1 "142 Tahun Stasiun Ambarawa – Wisata Sejarah Kereta Api Indonesia" (in Indonesian). heritage.kereta-api.co.id, PT Kereta Api Indonesia (Kompas): p. 12. 23 May 2015. 
  4. Under Peraturan Menteri Kebudayaan dan Pariwisata Nomor PM.57/PW.007/MKP/2010

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 7°15′56″S 110°24′05″E / 7.265424°S 110.401359°E / -7.265424; 110.401359