உள்ளடக்கத்துக்குச் செல்

நீராவி உந்துபொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீராவி உந்துப் பொறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிரேட் வெஸ்டேர்ன் ரெயில்வேயின் கிங் வகை உந்துபொறியின் வரைதல்

நீராவி உந்துபொறி (steam locomotive) நீராவியால் இயங்கும் பொறியின் வழியே ஆற்றலைப் பெறுகின்ற ஓர் தொடர்வண்டி உந்துபொறி ஆகும். இவ்வகை உந்துபொறிகளில் ஏதேனும் எரிபொருளுக்குத் (வழமையாக விறகு, கரி அல்லது எண்ணெய்) தீ மூட்டி கொதிகலனில் உண்டாக்கப்படும் நீராவியால் நீராவிப்பொறி இயக்கப்படுகிறது. எரிபொருளும் நீரும் உந்துப் பொறியிலேயே (அல்லது அதன்கூடவே பின்னால் இழுக்கப்படும் வண்டிகளில்) எடுத்துச் செல்லப்படுகிறது.

நீராவி உந்துபொறிகள் முதலில் ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்டன. தொடர்வண்டிப் போக்குவரத்தில் இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதி வரை இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் படிப்படியாக மின் உந்துபொறிகளும் டீசல் உந்துபொறிகளும் இவற்றிற்கு மாற்றாக அமைந்தன.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Steam locomotives
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவி_உந்துபொறி&oldid=4265730" இலிருந்து மீள்விக்கப்பட்டது