அமோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோல்
آمل
பண்டைய பெயர்கள்: அமெர்தாத், அமெல்ட், அமுயி,
அமோ, அமெலா, அமோல்
நகரம்
View of the Two Historical Bridges of Amol at Night
Tomb of Mir Heydar Amoli
fireplace
Tomb Mir bozorg
Amol History Museum
17 Shahrivar Square
Alaviyan square
அமோல்-இன் கொடி
கொடி

சின்னம்
நாடுஈரான்
மாகாணங்கள்மாசாந்தரான்
மண்டலம்அமோல்
பாக்ச்சுமத்திய மாவட்டம்
ஒருங்கிணைந்தது (நகரம்)1923[1]
அரசு
 • நகரத் தந்தைஅலி தாவூதி [2]
பரப்பளவு
 • நகரம்21 km2 (8 sq mi)
ஏற்றம்76 m (249 ft)
மக்கள்தொகை (2016 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)
 • நகர்ப்புறம்2,37,528[3]
 • பெருநகர்3,64,692
நேர வலயம்ஈரானிய சீர் நேரம் (ஒசநே+3:30)
அஞ்சல் குறியேடு46131-46391[4]
தொலைபேசி குறியீடு(+98) 11
இணையதளம்amol.ir
amol.gov.ir

அமோல் ( Amol ) ஒலிப்பு அமுல் எனவும் அறியப்படும் என்பது ஈரானின் மாசாந்தரன் மாகாணத்தில் உள்ள அமோல் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத்திற்கு தலைநகராகவும் செயல்படுகிறது. [5]

அமைவிடம்[தொகு]

அமோல் அராசு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது காசுப்பியன் கடலுக்கு தெற்கே 20 கி.மீ (12 மை) தொலைவிலும் அல்போர்சு மலைகளுக்கு வடக்கே 10 கி.மீ (6.2 மை) தொலைவிலும் உள்ளது. மேலும், இது தெகுரானிலிருந்து 180 கிலோமீட்டர்கள் (110 மை) தொலைவிலும், மாகாண தலைநகரான சாரிக்கு மேற்கே 60 கிலோமீட்டர்கள் (37 மை) தொலைவிலும் உள்ளது.

பின்னணி[தொகு]

இது ஈரானின் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் ஒரு வரலாற்று நகரமாகவும் உள்ளது. அதன் அடித்தளம் அமர்டுக்கு முந்தையது. எழுதப்பட்ட வரலாற்றில், அமோல், சா நாமாவின், நிகழ்வுகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்துள்ளது. அமோல் என்பது ஈரானின் அரிசி தலைநகரான மாசாந்தரனின் தொழில் மையமாகவும் கலாச்சாரத்தின் துருவமாகவும் உள்ளது. ஈரானின் போக்குவரத்து, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழில்துறையின் மிக முக்கியமான நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் இது ஈரானின் பால் மற்றும் இறைச்சி பொருட்கள் மையமகவும் உள்ளது. மேலும் இது வரலாற்று, அறிவியல் மற்றும் தத்துவ நகரம், இறக்காத நகரம் மற்றும் எசார் சங்கர் நகரம் எனவும் அறியப்படுகிறது [6]

ஈரானின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரத்தை பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் புவியியலாளர்கள் இது கிமு 1 மில்லினியத்தில் நிறுவப்பட்டதாக நம்புகின்றனர். புராண அரசர் தக்முராசின் ஆட்சியின் போது நகரம் அதன் எழுச்சியைக் கண்டதாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். [7]

அமோல் நகரின் சிறப்புகள்[தொகு]

  • ஈரானின் முதல் எஃகு ஆலை [8] [9] [10]
  • ஈரானில் முதல் பீரங்கி மற்றும் துப்பாக்கிப் பட்டறை [11]
  • ஈரானில் முதல் உலோக வார்ப்புகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை [12] [13] [14]
  • ஈரானில் முதல் நவீன இரயில்வே [15] [16]
  • ஈரானில் முதல் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலை [17]
  • ஈரானின் முதல் சாலைக் கட்டிடம் [18]
  • வடக்கு ஈரானின் முதல் வணிக துறைமுகம் [19] [20]
  • ஈரானில் முதல் பருத்தி ஜின் தொழிற்சாலை [21]
  • ஈரானின் முதல் கனிம நீர் தொழிற்சாலை [22]
  • ஈரானில் முதல் மரத் தொழிற்சாலை [23]
  • ஈரானில் உள்ள பழமையான பள்ளி [24]

அகழ்வாராய்ச்சிகள்[தொகு]

சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கலே கேசு மலை மீது, சில பழங்கால நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொல்லியல் பகுப்பாய்வு கிமு 1 ஆம் மில்லினியத்தைக் கணக்கிட்டது. வெண்கல வயது முதல் இன்றுவரை நகைகள் மற்றும் பொருட்களின் பின்னணியை வெளிப்படுத்தியது. சகாப்தத்தின் பாலிரான் படைப்புகளில் ஆய்வு செய்ததில் பழைய கற்காலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. அதிகாரப்பூர்வ இணையதளம்
  2. https://www.imna.ir/news/540017
  3. "Census of the Islamic Republic of Iran, 1395 (2016)". AMAR (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. p. 02. Archived from the original (Excel) on 7 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
  4. Iran Post Website. Postcode.post.ir (July 11, 2011). Retrieved on March 1, 2012.
  5. "Approval of the organization and chain of citizenship of the elements and units of the divisions of Mazandaran province, centered in Sari city". பார்க்கப்பட்ட நாள் 14 January 2024.
  6. "آمل شهری 3 هزار ساله در تاریخ ایران/ شهری به نام نخستین پایتخت علویان و مرکز اشکانیان- اخبار استانها – Hadi hosseini – Hadi". பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  7. Amol origin at Hamshahri
  8. Towards a Modern Iran: Studies in Thought, Politics and Society
  9. "اینجا قرار بود نخستین کارخانه ذوب‌آهن ایران باشد+تصاویر". October 27, 2018. பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  10. Haj Muhammad Hassan Amin al-Zarb: His World and His Philosophy of Life
  11. "نادر شاه افشار و تلاش برای ایجاد نیروی دریایی". பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  12. In the time of Nader Shah Afshar
  13. NAVY i. Nāder Shah and the Iranian Navy / Encyclopædia Iranica
  14. Persia and the Persian Question, Volume 2 / கர்சன் பிரபு
  15. Persia and the Persian Question, Volume 1 / கர்சன் பிரபு
  16. "AMĪN-AL-ŻARB, ḤĀJJ MOḤAMMAD-ḤASAN – Encyclopaedia Iranica". பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  17. "You are being redirected..." பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  18. History of construction in the first Pahlavi period
  19. "شهرنشینی و ساختارهای آن در طبرستان". பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  20. The Diary of H.M. the Shah of Persia, During His Tour Through Europe in A.D. 1873
  21. History of commercial houses in the Pahlavi and Qajar eras
  22. "تاریخچه آب های معدنی در ایران". November 16, 2016. பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  23. "MDF sheet history".
  24. "آمل شهری 3 هزار ساله در تاریخ ایران/ شهری به نام نخستین پایتخت علویان و مرکز اشکانیان- اخبار استانها – Hadi hosseini – Hadi". பார்க்கப்பட்ட நாள் July 29, 2020."آمل شهری 3 هزار ساله در تاریخ ایران/ شهری به نام نخستین پایتخت علویان و مرکز اشکانیان- اخبار استانها – Hadi hosseini – Hadi".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமோல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோல்&oldid=3869691" இலிருந்து மீள்விக்கப்பட்டது