அமிர்தானந்தமயி
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி | |
---|---|
![]() | |
பிறப்பு | சுதாமணி செப்டம்பர் 27, 1953 அமிர்தபுரி, கொல்லம் மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | ![]() |
மற்ற பெயர்கள் | அம்மா, அம்மாச்சி, அரவணைக்கும் அன்னை, அமிர்தேஸ்வரி |
பணி | சமூக சேவையாளர் |
அமைப்பு(கள்) | அமிர்தா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சமூக சேவையாளர், ஆன்மீகவாதி |
வலைத்தளம் | |
https://www.amma.org |
மாதா அமிர்தானந்தமயி தேவி (பூர்வாசிரமப் பெயர்: சுதாமணி, செப்டம்பர் 27, 1953) ஓர் இந்திய முற்போக்கு ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை ("Hugging saint") என்றும் அழைக்கப்படுகிறார். கேரளத்தில் தற்போது அமிர்தபுரி ஆசிரமம் இருக்கும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் ஏழை மீனவர் சமூகத்தில் பிறந்த அமிர்தானந்தமயி இன்று மாதா அமிர்தானந்தமயி மடம் அறக்கட்டளை முலம் பரவலாக உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து செய்கிறார். 2004 சுனாமிக்கு பிறகு இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார்.[1]
இவர் சுற்றுச்சூழல், மத ஒற்றுமை, அறிவியல், ஆன்மீகம் ஆகியவை குறித்து எழுதியும், பேசியும் உள்ளார்.
வாழ்க்கை வரலாறு[தொகு]

இளமைப் பருவம்[தொகு]
இவர் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் தற்போது அமிர்தபுரி ஆசிரமம் இருக்கும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் எளிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு 1953, செப்டம்பர் 27, ஆம் நாள் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது வீட்டு வேலைகளை செய்யவும், இவருடைய சிறிய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், இவருடைய மூன்றாம் வகுப்பு தொடக்க கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.[2][3]

தரிசனம்[தொகு]
மாதா அமிர்தானந்த மயி தன் பக்தர்களை ஒரு தாயைபோல கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார். அவ்வாறு அரவணைக்கும் போது தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியைப் பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் எனவே அம்மாவின் பக்தர்களும் சீடர்களும் இவரை அரவணைக்கும் அன்னை (Hugging Saint ) என அழைக்கின்றனர்
உலகளாவிய தொண்டுகள்[தொகு]

1987ம் ஆண்டு முதல் அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்தி தொண்டுகள் செய்துவருகின்றார்.
அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை[தொகு]

உலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையாக உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் முதலியன உள்ளன.
பலசமய கூட்டறிக்கை[தொகு]
இன்று உலகத்தில் சுமார் 35 மில்லியன் மக்கள் மேற்கூறிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொணர நாட்டுத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் உழைக்க வேண்டும் என்றும் அடிமைத் தனம் உலகம் முழுவதிலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் 2014, திசம்பர் 2ஆம் நாள் வத்திக்கான் நகரத்தில் உலக சமயத் தலைவர்கள் கூடி வாக்குறுதி எடுத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள்.
அமிர்தானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில் அவர் உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து அடிமைத்தன ஒழிப்பு அறிக்கையில் கையெழுத்திட்டார்.[4]
சமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்க, கீழை மரபுவழி, ஆங்கிலிக்க சபை, யூத, சுனி மற்றும் ஷியா, இந்து, புத்த சமயப் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார்.[5]
“மனிதர் அனைவரும் சம மதிப்பு கொண்டவர்கள் என்றும், அடிப்படையான மனித மாண்பு உடையவர்கள் என்றும், சுதந்திர உரிமை பெற்றவர்கள் என்றும் உலக மக்கள் அனைவரும் ஏற்கவேண்டும்.” மனிதர்கள் பிற மனிதர்களால் அடிமைகள் ஆக்கப்படுவது இன்றைய உலகிற்கு “மாபெரும் இழுக்கு” என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.
சிறார் தொழிலில் ஈடுபட்டோரை விடுவிக்கும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அமிர்தானந்தமயி கேட்டுக்கொண்டார்.
பங்கேற்றவர்கள்[தொகு]
திருத்தந்தை பிரான்சிசு உட்பட யூதம், இசுலாம், இந்து சமயம், புத்தம் போன்ற பிற சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் இந்த அறிக்கை வெளியீட்டில் பங்கேற்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:
- திருத்தந்தை பிரான்சிசு - கத்தோலிக்க கிறித்தவ சமயத்தின் உலகளாவிய தலைவர்
- மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு - கீழை மரபுவழி திருச்சபையின் உயர் தலைவர் (பிரதிநிதி:மேதகு இம்மானுவேல்)
- மேதகு ஜஸ்டின் வெல்பி - ஆங்கிலிக்க சபைப் பெருந்தலைவர்; காண்டர்பரி பேராயர்
- புத்த பிக்கு வணக்கத்துக்குரிய திக் நாட் ஹான் (பிரதிநிதி: புத்த பிக்குணி வணக்கத்துக்குரிய திக் நூ சான் கோங்) - புத்தம்
- அல்-அசார் பெரும் இமாம் முகம்மது அகமது எல்-தாயேப் (பிரதிநிதி:முனைவர் அப்பாஸ் அப்தல்லா அப்பாஸ் சுலைமான்)- இசுலாம்
- பெரும் அயத்தொல்லா முகம்மது தாக்கி அல்-மொதர்ரேசி - இசுலாம்
- பெரும் அயத்தொல்லா ஷேக் பஷேர் உசேன் அல் நஜாபி (பிரதிநிதி: ஷேக் நாசியா ரசாஸ் ஜாபர்)- இசுலாம்
- ஷேக் ஒமார் அபூத் - இசுலாம்
- அம்மா அமிருதானந்தமயி - இந்து சமயம்
- வணக்கத்துக்குரிய தாதுக் கிரிண்டே தம்மரத்தன நாயக் மகா தேரோ - மலேசிய புத்தத் துறவி
- முதன்மை ரபி டேவிட் ரோசன் - யூதம்
- ரபி ஸ்கோர்க்கா - யூதம்
பதவிகள்[தொகு]
- நிறுவனர் & தலைவர், மாதா அமிர்தானந்தமயி மடம்
- நிறுவனர், Embracing the World
- வேந்தர், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் About Amma .
- நிறுவனர், Amrita Institute of Medical Sciences (AIMS Hospital)Amrita Institute of Medical Sciences and Research Centre | AIMS Hospital, Kochi, Kerala, India பரணிடப்பட்டது 2010-10-18 at the வந்தவழி இயந்திரம். Aimshospital.org.
- Parliament of the World's Religions, International Advisory Committee Member ABOUT US / International Advisory Committee | Council for a Parliament of the World's Religions பரணிடப்பட்டது 2012-06-28 at the வந்தவழி இயந்திரம். Parliamentofreligions.org. Retrieved on 2011-06-24.
அயல் நாட்டில் பணிகள்[தொகு]
1993ல் உலக சமய நாடாளுமன்றத்தின் 100ஆம் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார்.
தலைமையிடம்[தொகு]
இவரின் தலைமை ஆசிரமம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அமிர்தபுரி என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது.
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "Amritanandamayi world peace awardee". https://www.hindutamil.in/news/india/1133887-world-peace-security-award-to-mata-amrithanandamayi-devi-at-70th-birthday-kerala.html.
- ↑ . https://www.amritapuri.org/4561/beyond-caste.aum.
- ↑ . https://www.hindutamil.in/news/tamilnadu/1129446-world-leader-award-for-peace-and-security-mata-amritanandamayi-devi-felicitation-ceremony.html.
- ↑ அடிமைத்தன ஒழிப்பு பற்றி சமயத் தலைவர்கள் விடுக்கும் கூட்டறிக்கை
- ↑ அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை