அபூர்வா காசரவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூர்வா காசரவள்ளி
2012இல் அபூர்வா காசரவள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஆத்திரேலியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
2000 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
வந்தனா சுப்ரியா
உறவினர்கள்அனன்யா காசரவள்ளி (சகோதரி)

அபூர்வா காசரவள்ளி ( Apurva Kasaravalli ) ஓர் இந்தியத் தொழிலதிபரும், நடிகரும் மற்றும் கன்னடத் திரைப்படங்களைத் தயாரித்த திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். [1] [2][3] [4]

சொந்த வாழ்க்கை[தொகு]

அபூர்வா கிரிஷ் காசரவள்ளி மற்றும் வைசாலி காசரவள்ளியின் மகன் ஆவார். மேலும் நடிகையும் இயக்குநருமான அனன்யா காசரவள்ளி இவரது சகோதரியாவார். [3] அபூர்வா கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் படித்து ஆத்திரேலியாவின் சிட்னியிலுள்ள சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [5] அபூர்வா ஒரு ஒடிசி கலைஞரும் நடன இயக்குனருமான வந்தனா சுப்ரியா என்பவரை மணந்தார்.

அபூர்வாவும் வந்தனாவும் "ஆனந்தி கலை அறக்கட்டளை" என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்துகிறார்கள். இது பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளுடன் வேலை செய்கிறது. இவர்கள் பெங்களூரிலுள்ள கலாச்சார மையமான இரவீந்திர கலாசேத்திராவில் ஆண்டுதோறும் "அஸ்மி" என்ற நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்கள். இதில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Apurva and Vandana curate unique festival". Deccan Herald. India: டெக்கன் ஹெரால்டு. 2018-09-28. Archived from the original on 2019-09-02. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  2. Govind, Ranjani (2015-07-07). "Music is integral to my story, says Apurva Kasaravalli". தி இந்து. India. Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  3. 3.0 3.1 "Apoorva Kasaravalli gets married to Vandana Supriya - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. India. Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  4. Upadhyaya, Prakash (2016-05-18). "Resul Pookutty finally set for Sandalwood debut". International Business Times, India Edition. India: International Business Times. Archived from the original on 2019-09-02. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  5. "Apoorva weds Vandana, Dr Kasaravalli son wedding". Indiaglitz. India. Archived from the original on 2019-09-02. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபூர்வா_காசரவள்ளி&oldid=3917630" இலிருந்து மீள்விக்கப்பட்டது