உள்ளடக்கத்துக்குச் செல்

வைசாலி காசரவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைசாலி காசரவள்ளி
பிறப்பு(1952-04-12)12 ஏப்ரல் 1952
குல்பர்கா, கருநாடகம், இந்தியா
இறப்பு27 செப்டம்பர் 2010(2010-09-27) (அகவை 58)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
கிரிசு காசாரவள்ளி]] (தி. 1978⁠–⁠2010)
பிள்ளைகள்அபூர்வா (மகன்)
அனாயா (daughter)

வைசாலி காசரவள்ளி (Vaishali Kasaravalli-12 ஏப்ரல் 1952- செப்டம்பர் 2010) ஒரு புகழ்பெற்ற கன்னட நடிகை, தொலைக்காட்சி தொடர் இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

இளமை

[தொகு]

1952ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி குல்பர்காவில் நாடக ஆர்வலர் பெற்றோர்களான சிதகோபி மற்றும் நிர்மலா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார் .

தொழில் வாழ்க்கை

[தொகு]

நடிகை

[தொகு]

வைசாலி, பி. வி. கராந்த் என்பவரால் நாடகத் துறையில் அறிமுகமானார். இவரது குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, ஹயவதனா, ஜோகுமாரசுவாமி, மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், நாடககாரனா ஷ்தனெயல்லி ஆரு பத்ரகலு மற்றும் பல நாடகங்களில் நடித்தார். சேவந்தி பிரசங்காவை இயக்கினார். மராத்தி மற்றும் இந்தியில் இருந்து பல உன்னதமான படைப்புகளை மொழிபெயர்த்தார்.

இவர் யாவ ஜன்மத மைத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1972-இல் பேராசிரியர் ஹுச்சுராயா என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரது பிரபலமான திரைப்படங்கள் அக்ரமானா, யாரிகு ஹெல்பெடி, கிட்டு புட்டு, குபி மட்டு இயாலா, அங்கையல்லி அப்சாரே, க்ரௌர்யா, ஹோம்பிசிலு, சுவாமி, தபரனா காத்தே, ஷீரா சாகரா, அனுகோலக்கோபா கந்தா, அசெகோபா மீசெகோபா, மூரு தாரிகலு, மகாதசோஷி சரண பசவா, சந்திரமுகி பிரணசகி, பஞ்சாரதா கிலி, ஹூவோந்து பெக்கு பல்லிகே, விக்னேஸ்வரன வாகனா, சங்கர் குரு, பாலிதம்ஷா, பரிவர்த்தனா, ஸ்பர்ஷா, நிகதா, கணேசனா மதுவே, கௌரி கணேஷா, தவருமனே உடுகோரே, எண் 73 சாந்தினிவாச, மற்றும் பல. கிரிஷ் காசரவள்ளி இயக்கிய ஆக்ரமானாவில் முன்னணி கதாநாயகியாக நடித்ததன் மூலம் இவர் விருதுகளையும், சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதையும் வென்றார்.

நம்ம நம்மள்ளி, காசா முஷூர் சரோஜா, மால்குடி டேஸ், க்ஷமய தரிட்ரி, மாயாம்ருகா, மான்வந்தரா, சாதனே உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் வைசாலி நடித்தார். டி. எஸ். நாகாபரணா இயக்கிய நம்ம நம்மள்ளி தான் இவர் நடித்த தொடர்களில் முதலாவது ஆகும்.

திரைப்படங்கள்

[தொகு]
  • 1972 யாவ ஜன்மத மைத்ரி (நடிகை)
  • 1972 சுபத்ரா கல்யாணம் (நடிகை)
  • 1974 பேராசிரியர் ஹுச்சுராயா (நடிகை)
  • 1974 எரடு கனசு (நடிகை)
  • 1974 பூட்டயனா மகா அய்யு (நடிகை)
  • 1974 பங்காரடா பஞ்சாரா (நடிகை)
  • 1976 ஃபலிதம்ஷா (நடிகை)
  • 1976 பரிவர்த்தனே (நடிகை)
  • 1977 கிட்டு புட்டு (நடிகை-கௌரி)
  • 1978 சந்தர்பா (ஒலி இணைப்பு கலைஞர்)
  • 1978 சங்கர் குரு (நடிகை)
  • 1978 ஹோம்பிசிலு (நடிகை-டாக்டர் வசந்தி)
  • 1978 கீஜகனா கூடு (ஒலி இணைப்பு கலைஞர்)
  • 1980 வாத்சல்ய பாத்தா (ஒலி இணைப்பு கலைஞர்)
  • 1980 அக்ரமானா (நடிகை)
  • 1982 மானசா சரோவரா (நடிகை)
  • 1983 அன்வேஷனே (ஒலி இணைப்பு கலைஞர்)
  • 1984 விக்னேஸ்வரா வாஹனா (நடிகை)
  • 1985 மாருதி மஹிமே (நடிகை)
  • 1985 மமத்தியா மாடிலு (நடிகை)
  • 1986 ஹென்னி நினகேனு பந்தனா (நடிகை)
  • 1988 சிரஞ்சீவி சுதாகர் (நடிகை)
  • 1988 தபரனா காத்தே (நடிகை)
  • 1988 மகாதசோஹி ஷரனா பசவா (நடிகை)
  • 1988 கதினா பென்கி (நடிகை)
  • 1989 மானே (டப்பிங் கலைஞர்)
  • 1989 பங்காரடா படுகு (நடிகை)
  • 1990 ஸ்ருதி (நடிகை)
  • 1990 ஹோசா ஜீவனா (நடிகை)
  • 1990 கணேசனா மதுவே (நடிகை-சத்தியபாமா/கணேசாவின் தாய்)
  • 1990 அபிமன்யு (நடிகை)
  • 1990 ஆசெகோப்பா மீசெகோப்பா (நடிகை)
  • 1991 தவருமனே உடுகோர் (நடிகை)
  • 1991 ரெடிமேட் காண்டா (நடிகை)
  • 1991 மங்கள்யா (நடிகை)
  • 1991 கல்யாண மந்தபா (நடிகை)
  • 1991 கௌரி கல்யாணம் (நடிகை)
  • 1991 கௌரி கணேஷா (நடிகை-சந்திரமௌலி அம்மா)
  • 1992 அமரா பிரேமா (நடிகை)
  • 1992 குபி மட்டு இயாலா (நடிகை, ஆடை அலங்காரம்)
  • 1992 ஷீரா சாகரா (நடிகை)
  • 1992 ஹடமாரி ஹென்னு கிலாடி காண்டு (நடிகை)
  • 1992 குண்ட ராஜ்ய (நடிகை)
  • 1992 விநாயகர் சுப்பிரமணிய (நடிகை)
  • 1992 பெல்லியப்பா பங்காரப்பா (நடிகை)
  • 1992 அக்னி பஞ்சாரா (நடிகை)
  • 1993 நானேண்டு நிம்மவனே (நடிகை)
  • 1993 மணிகண்டனா மஹிமே (நடிகை)
  • 1993 கடம்பரி (நடிகை)
  • 1993 ஹூவண்டு பெக்கு பாலிஜ் (நடிகை)
  • 1993 அனுராகடா அலெகலு (நடிகை)
  • 1993 அங்கையல்லி அப்சரே (நடிகை)
  • 1994 யாரிகு ஹெல்பெடி (நடிகை)
  • 1995 நிகத்தா (நடிகை)
  • 1995 ஹோசா படுகு (நடிகை)
  • 1996 சவுபாக்யா தேவதே (நடிகை)
  • 1996 ஹலோ டாடி (நடிகை)
  • 1996 அமெரிக்கா அமெரிக்கா (திரைப்படம்)
  • 1996 க்ரௌர்யா (இணை இயக்குநர், ஆடை வடிவமைப்பு)
  • 1997 தாய் சாஹேபா (ஆடை வடிவமைப்பு)
  • 1997 பிரேமா ராகா ஹது கேலதி (நடிகை)
  • 1997 கலவீடா (திரைப்படம்)
  • 1999 சந்திரமுகி பிரணசாகி (நடிகை)
  • 2000 ஸ்ரீரஸ்து சுபமஸ்து (நடிகை)
  • 2000 பிரீமியர் (நடிகை)
  • 2002 தீபா (கோஸ்டுமியா)
  • 2003 பாஞ்சாலி (நடிகை)
  • 2003 தவறான எண் (படம்)
  • 2006 சவிரா மெட்டிலு (நடிகை)
  • 2007 எண் 73, சாந்தி நிவாசா (நடிகை-சீதாதேவி)
  • 2007 நயீ நேரலு (ஒலி இணைப்பு கலைஞர்)
  • 2010 கனசெம்போ குடுரையநேரி (கோஸ்டுமெய்)

இயக்குநர்

[தொகு]

வைசாலி 'முட்டினா தோரணா' மற்றும் 'மூடலா மானே' போன்ற பிரபலமான கன்னடத் தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர்

[தொகு]

காசரவள்ளி தனது கணவரின் திரைப்படங்களான பானாடா, வேசா, மானே, குபி மாது இய்யாலா, க்ரௌர்யா, தாய் சாஹேபா (1998-இல் தேசிய விருது), தீபா மற்றும் கனசெம்பா குடுரையநேரி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.

விருதுகள்

[தொகு]

வைசாலி பல விருதுகளைப் பெற்றார்.

  • நடிப்புக்கான மாநில விருது (அக்ரமானா)
  • ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது (தாய் சஹேபா)
  • மாநில சிறந்த துணை நடிகை (பாலிதம்ஷா)
  • நாடக அகாடமி விருது மற்றும் ராஜ்யோத்சவ விருது.

அரசியல்

[தொகு]

வைசாலி 90களின் பிற்பகுதியில் அரசியலில் இருந்தார். 1996ஆம் ஆண்டு பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் லோக் சக்தி கட்சியிலிருந்து போட்டியிட்டார். முதலமைச்சர் இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் தீவிர ரசிகையாக இருந்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

வைசாலி புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கிரிசு காசரவள்ளியை மணந்தார். இவருக்கு அபூர்வ காசரவள்ளி மற்றும் அனன்யா காசரவள்ளி என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.[2]

மரணம்

[தொகு]

நீரிழிவு நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட பின்னர், இவர் செப்டம்பர் 27,2010 அன்று பெங்களூரில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Actor Director Vaishali Kasaravalli passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 September 2010 இம் மூலத்தில் இருந்து 3 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103135527/http://articles.timesofindia.indiatimes.com/2010-09-28/bangalore/28265621_1_versatile-actor-award-serials. 
  2. "Vaishali Kasaravalli: A multifaceted personality". Sify.com. 28 September 2010. Archived from the original on 9 October 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_காசரவள்ளி&oldid=4114661" இலிருந்து மீள்விக்கப்பட்டது