அன்பின் நகரம்
தோற்றம்
அன்பின் நகரம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | விருதுநகர் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 626201 |
அன்பின் நகரம் (Anbinnagaram) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள குக்கிராமமாகும். இது கங்கரக்கோட்டை ஊராட்சியால் நிருவகிக்கபடுகிறது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான விருதுநகரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 579 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
மக்கள் வகைபாடு
[தொகு]சுமார் 3000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள கிராம மக்களில் சுமார் 1000 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.[சான்று தேவை] இங்குள்ள பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு ஓர் ஆரம்பப் பள்ளியும் அத்துடன் மூன்று கிறித்துவ சபைகளும் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரே சமயத்தையும் ஒரே இனத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anbinnagaram Village , Vembakottai Block , Virudhunagar District". www.onefivenine.com. Retrieved 2025-02-27.