அனந்த நாராயண் சிங் தியோ
அனந்த நாராயண் சிங் தியோ | |
---|---|
உறுப்பினர்-ஒன்பதாவது மக்களவை | |
பதவியில் 2 திசம்பர் 1989 – 13 மார்ச்சு 1991 | |
முன்னையவர் | சோம்நாத்து ராத்து |
பின்னவர் | சோம்நாத்து ராத்து |
தொகுதி | ஆசிகா |
எதிர்க்கட்சித் தலைவர்-ஒடிசா சட்டமன்றம் | |
பதவியில் 13 பிப்ரவரி 1980 – 17 பிப்ரவரி 1980 | |
முன்னையவர் | பிரகலாத் மாலிக் |
பின்னவர் | அரத் குமார் தேவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1929 |
இறப்பு | 1 திசம்பர் 2003 | (அகவை 74)
துணைவர் | சாந்தி தேவி |
உறவுகள் | நதினி தேவி (மருமகள்) |
பிள்ளைகள் | கிசோர் சந்திர சிங் தியோ |
கல்வி | ஸ்டீவர்ட் பள்ளி, தூன் பள்ளி |
முன்னாள் கல்லூரி | தூய இசுடீபன்சு கல்லூரி, தில்லி |
அனந்த நாராயண் சிங் தியோ (Ananta Narayan Singh Deo)(5 செப்டம்பர் 1929 - 1 திசம்பர் 2003) ஓர் இந்திய ஆட்சியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் ஆசிகா மக்களவைத் தொகுதியிலிருந்து ஒன்பதாவது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். சுரதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 13வது சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். ஒடிசா அமைச்சரவையில் தொழில்கள், வணிகம், சமூக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணை அமைச்சராகவும் தாராகோட் தோட்டத்தின் ராஜாவாகவும் இருந்துள்ளார்.
வாழ்க்கை
[தொகு]அனந்த நாராயண் சிங் தியோ 5 செப்டம்பர் 1929-இல் பிறந்தார்.[1] இவர் கட்டாக்கில் உள்ள ஸ்டீவர்ட் பள்ளியில் கல்வி பயின்றார். தி டூன் பள்ளியிலிருந்து மூத்த கேம்பிரிட்ச்சியில் தேர்ச்சி பெற்றார். 1951-இல் தில்லி தூய இசுடீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[2] இவர் ஏப்ரல் 1960இல் சாந்தி தேவியை மணந்தார்.[3] இவரது மகன் கிசோர் சந்திர சிங் தியோ[4] மற்றும் மருமகள் நந்தினி தேவி ஆவர்.[5][6] தியோ 1 திசம்பர் 2003 அன்று தனது 74ஆவது வயதில் இறந்தார்.[7]
தொழில்
[தொகு]தியோ 13 பிப்ரவரி 1980இல், இவர் எதிர்க்கட்சித் தலைவராக பிரகல்லாத் மல்லிக்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். இவர் 2000 ஒடிசா சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1980 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பட்நாகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Late Ananta Narayan Singh Deo". பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "Odisha Review 1967" (PDF).
- ↑ "Member's Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "Orissa ex-royals in fray". பார்க்கப்பட்ட நாள் 2022-12-12."Orissa ex-royals in fray". Hindustan Times. 2004-04-09. Retrieved 2022-12-12.
- ↑ "BIO-DATA OF PRESENT MEMBER OF LEGISLATIVE ASSEMBLY IN ORISSA" (PDF).
- ↑ "In Ganjam and Gajapati, family is where loyalty lies". பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ The Journal of Parliamentary Information: Volume 50. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.