உள்ளடக்கத்துக்குச் செல்

சோம்நாத்து ராத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோம்நாத் ராத்து
Somnath Rath
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்இராம்சந்திர ராத்து
பின்னவர்அனந்த நாராயண் சிங் தியோ
தொகுதிஆசிகா, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-02-17)17 பெப்ரவரி 1924
பதகதா, கஞ்சாம் மாவட்டம் , ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு7 அக்டோபர் 2013(2013-10-07) (அகவை 89) [1][2]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அனசுயா ராத்து
மூலம்: [1]

சோம்நாத்து ராத்து (Somnath Rath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று கஞ்சாம் மாவட்டத்தின் சோர்டா தொகுதிக்கு உட்பட்ட இலட்கர் கிராமத்தில் இவர் பிறந்தார். கட்டாக்கில் உள்ள மதுசூதன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர் 1951 ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டப் பேரவையின் சபாநாயகராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Odisha Speaker Somnath Rath Passes Away". Outlook. 7 October 2013. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
  2. "Ex-assembly speaker Somanath Rath dies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 October 2013. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்நாத்து_ராத்து&oldid=3806185" இலிருந்து மீள்விக்கப்பட்டது