அந்தமான் பாறு-ஆந்தை
| அந்தமான் பாறு-ஆந்தை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுட்ரிக்கிபார்மிசு |
| குடும்பம்: | இசுட்ரிகிடே |
| பேரினம்: | நினாக்சு |
| இனம்: | நி. அபினிசு |
| இருசொற் பெயரீடு | |
| நினாக்சு அபினிசு பியாவன், 1867 | |
அந்தமான் பாறு-ஆந்தை (Andaman hawk-owl) அல்லது அந்தமான் பூபுக் (நினாக்சு அபினிசு) என்பது இசுட்ரிகிடே குடும்பத்தினைச் சார்ந்த ஆந்தை சிற்றினமாகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும்.
உயிரியல்
[தொகு]அந்தமான் பாறு ஆந்தை, சிறியது முதல் நடுத்தர அளவிலான பழுப்பு ஆந்தை ஆகும். இது வட்டமான தலையினை உடையது. காதுகளில் காது கற்றை இல்லை. முக வட்டு சாம்பல் நிறமானது. கண்கள் மஞ்சள், செரி மந்தமான பச்சை நிறமுடையது. அலகு மஞ்சள்-கொம்பு நிறமுடையது, மேல் முகடும் நுனியும் வெளிறிய நிறமுடையது. இதனுடைய உடல் நீளம் 25 முதல் 28 செ.மீ வரை இறக்கும். அந்தமான் பாறு ஆந்தையின் இறக்கை நீட்டமானது 170 மி.மீ. வரை இருக்கும்.[2]
இந்த வகை ஆந்தைகளின் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடு, மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் உள்ளன. வாழ்விட இழப்பு காரணமாக இந்தச் சிற்றினம் அரிதாகி வருகிறது.
உணவு
[தொகு]அந்தமான் பாறு ஆந்தை முக்கியமாக பூச்சிகளை உண்ணுகின்றது. இந்த ஆந்தை பறக்கும் போது அந்துப்பூச்சிகளையும் வண்டுகளையும் வேட்டையாடுகிறது.
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International. 2017. Ninox affinis. The IUCN Red List of Threatened Species 2017: e.T22689420A118443805. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22689420A118443805.en. Downloaded on 01 January 2019.
- ↑ Lewis, Deane. "Andaman Hawk Owl (Ninox affinis) - Information, Pictures, Sounds". The Owl Pages (in ஆங்கிலம்). Retrieved 2021-07-06.