அட்டிவேரி பறவைகள் சரணாலயம்
அட்டிவேரி பறவைகள் சரணாலயம் Attiveri Bird Sanctuary ಅತ್ತಿವೇರಿ ಪಕ್ಷಿಧಾಮ | |
---|---|
கிராமம் | |
![]() அட்டிவேரி பறவைகள் சரணாலயம் | |
ஆள்கூறுகள்: 15°4′44″N 75°2′29″E / 15.07889°N 75.04139°E | |
நாடு | ![]() |
State | கருநாடகம் |
மாவட்டம் | வடகன்னட மாவட்டம் |
தாலுகா | முண்டுகாடு |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
அட்டிவேரி பறவைகள் சரணாலயம் (Attiveri Bird Sanctuary)இந்திய மாநிலமான கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்திலுள்ள முண்டுகாடு தாலுகாவில் இருக்கிறது. [1][2] இது முண்டுகாடிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், ஊப்ளி-தார்வாடிலிருந்து 43 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சுமார் 2.23 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் அட்டிவேரி நீர்த்தேக்கத்திலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள சரணாலயத்தின் ஒரு பகுதியில் நதி மற்றும் இலையுதிர் காடுகள் உள்ளன.
உண்ணிக்கொக்கு, கொண்டை நீர்க்காகம், சின்ன நீர்க்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்திகள், இந்திய சாம்பல் இருவாச்சி, தகைவிலான் உள்ளிட்ட பறவைகள் பல இங்கு வாழ்கின்றன. சரணாலயத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பலவகையான நீர்வாழ் உயிரினங்களை ஈர்க்கின்றன. நவம்பர் மாதம் முதல் மார்ச்சு மாதம் வரையிலான காலம் இச்சரணாலயத்தைப் பார்வையிடுவதற்கு உகந்த காலமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Attiveri Bird Sanctuary". http://www.karnatakawildlifeboard.org/Default.aspx?tabid=107&language=en-US. பார்த்த நாள்: 2012-09-11.
- ↑ "Attiveri Bird Sanctuary – Feel the Rustle of a Few Feathers". http://www.karnataka.com/hubli/attiveri-bird-sanctuary/. பார்த்த நாள்: 2012-09-11.