அட்சன் விரிகுடா

ஆள்கூறுகள்: 60°N 085°W / 60°N 85°W / 60; -85 (அட்சன் விரிகுடா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்சன் விரிகுடா
அட்சன் விரிகுடா, கனடா
அமைவிடம்வட அமெரிக்கா
ஆள்கூறுகள்60°N 085°W / 60°N 85°W / 60; -85 (அட்சன் விரிகுடா)
பெருங்கடல்/கடல் மூலங்கள்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
வடிநில நாடுகள்கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு
அதிகபட்ச நீளம்1,370 km (851.28 mi)
அதிகபட்ச அகலம்1,050 km (652.44 mi)
மேற்பரப்பளவு1,230,000 km2 (470,000 sq mi)
சராசரி ஆழம்100 மீட்டர்கள் (330 அடி)
உறைவுநடு-திசம்பர் முதல் நடு-சூன் வரை
Islandsபெல்சர் தீவுகள்,
ஒட்டாவா தீவுகள்
குடியேற்றங்கள்சர்ச்சில்

அட்சன் விரிகுடா (Hudson Bay) கனடாவின் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள விரிகுடாக் கடல் ஆகும். இது உலகின் நான்காவது மிகப்பெரும் கடல் ஆகும்; இதன் பரப்பு 316,000 சதுர மைல்கள் (819,000 சதுர கிலோமீட்டர்கள்). வடக்குக் கடலோரமும் மேற்கு கடலோரமும் நூனவுட்டிற்கு உரிமையானது. தெற்கு கடலோரம் மானிட்டோபாவிற்கும் ஒன்ராறியோவிற்கும் இடையே பிரிபட்டுள்ளது. கிழக்குக் கடலோரம் கியூபெக்கிற்குச் சொந்தமானது. இது அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் விரிகுடாவின் வடகிழக்கில் உள்ள அட்சன் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது. விரிகுடாவின் வடக்கில் உள்ள பாக்சு கால்வாய் இதை ஆர்க்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.

இதன் நீர் மிகப் பரந்த பரப்பில் பாய்கின்றது; ஏறத்தாழ 3,861,400 சதுர கிலோமீட்டர்கள் (1,490,900 sq mi) பரப்பில்[1] ஒன்ராறியோவின் பகுதிகள், கியூபெக், சஸ்காச்சுவான், ஆல்பர்ட்டா, பெரும்பாலான மானிட்டோபா, தென்கிழக்கு நூனவுட், மற்றும் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மினசோட்டா, மொன்ட்டானா பகுதிகளுக்குப் பாய்கின்றது. அட்சன் விரிகுடாவின் தென்பக்க கிளை ஜேம்சு விரிகுடா எனப்படுகின்றது.

1610இல் தனது கப்பல் டிசுகவரி மூலம் வந்து இந்த விரிகுடாவை கண்டறிந்த இங்கிலாந்தின் நாடுகாண் பயணி என்றி அட்சன் பெயரில் இது அழைக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Canada Drainage Basins". The National Atlas of Canada, 5th edition. Natural Resources Canada. 1985. Archived from the original on 4 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்சன்_விரிகுடா&oldid=3574710" இலிருந்து மீள்விக்கப்பட்டது