அடெல் (பாடகி)
அடெல் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அடெல் லாரி புளூ அட்கின்சு |
பிறப்பு | 5 மே 1988 டோட்டன்ஃகாம், வடக்கு இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
பிறப்பிடம் | மேற்கு நார்வுட், தெற்கு இலண்டன் இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இசை வடிவங்கள் | சௌல்[1] புளூஸ், பாப்பிசை |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, கிட்டார், பியானோ, கீபோர்டு, தாள வாத்தியம், செலஸ்டா |
இசைத்துறையில் | 2006 - இன்றளவில் |
வெளியீட்டு நிறுவனங்கள் | XL ரிகார்டிங்சு, கொலம்பியா ரிகார்ட்சு |
இணையதளம் | adele |
அடெல் லாரி புளூ அட்கின்சு (Adele Laurie Blue Adkins,[2] பிறப்பு 5 மே 1988), பரவலாக அடெல் என்ற ஒற்றைப் பெயரால் அறியப்படுபவர், ஓர் இங்கிலாந்து|இங்கிலாந்தைச் சேர்ந்த பாடலாசிரியையும் பாடகியும் ஆவார். சமூக வலைத்தளங்களின் தாக்கத்திற்கான ஒரு காட்டாக, 2006ஆம் ஆண்டில் மைஸ்பேஸ் இணையத்தளத்தில் இவரது நண்பர் தரவேற்றிய இவரது சோதனை முயற்சியால் கவரப்பட்ட எக்செல் ரிகார்டிங் நிறுவனம் இவருடன் உடன்பாடு கொண்டது. அடுத்த ஆண்டே இவரது கிரிடிக்ஸ் சாய்சிற்கு பிரிட் விருது பெற்றார். மேலும் பிபிசியின் 2008ஆம் ஆண்டின் குரல் விருதையும் பெற்றார். அவரது முதல் இசைத்தொகுப்பான 19 ஐக்கிய இராச்சியத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்குமுறை இந்தத் தொகுப்பிற்கு பிளாட்டினம் தட்டு வழங்கப்பட்டது.[3] ஐக்கிய அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு இறுதியில் சாடர்டே நைட் லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். 2009ஆம் ஆண்டு 51வது கிராமி விருதுகளில் அடெல் சிறந்த புதுக்கலைஞர், சிறந்த பெண் பாப் வாய்ப்பாட்டுக்காரர் விருதுகளைப் பெற்றார்.[4][5]
அடெல் தமது இரண்டாவது இசைத்தொகுப்பை, 21 , 2011ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டார்.[6][7] இது முதல் தொகுப்பைவிட வணிகளவில் பலமடங்கு வெற்றி கண்டது.[8]21 ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே 14 முறை பிளாட்டினம் சான்று பெற்றது;[3] அமெரிக்காவில் 1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாவது இடத்தை நீண்டநாட்கள் தக்கவைத்துக் கொண்ட சாதனையை படைத்தது.[9][10] இதன் வெற்றி கின்னஸ் சாதனைகளின் பல குறிப்புகளில் இடம்பெறச் செய்தது. இந்த இசைத்தொகுப்பு அவருக்கு ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்புக்கான கிராமி விருதைப் பெற்றுத் தந்தது. 2011இல், பில்போர்டு அடெலை ஆண்டின் கலைஞர் என்று சிறப்பித்தது.[11]
2012ஆம் ஆண்டு 54வது கிராமி விருதுகளில் ஆண்டின் சிறந்த பாடல் மற்றும் ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பு உட்பட ஆறு கிராமி விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.[12] அமெரிக்க பாப் பாடகி பியான்சே நோல்ஸ் மட்டுமே இதற்கு முன்னர் ஆறு கிராமி விருதுகளைப் பெற்றிருந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Adele: New Record is 'Quite Different'". SPIN.com. 2 November 2010. 11 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Frehsée, Nicole (22 January 2009), "Meet Adele, the U.K.'s Newest Soul Star", Rolling Stone. (1070):26
- ↑ 3.0 3.1 "Certified Awards Search". British Phonographic Industry. 11 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Brits on top: Duffy, Adele and Coldplay clinch top awards as they lead British winners at Grammys". Daily Mail (London: Associated Newspapers). 9 February 2011. http://www.dailymail.co.uk/tvshowbiz/article-1139346/Brits-Duffy-Adele-Coldplay-clinch-awards-lead-British-winners-Grammys.html. பார்த்த நாள்: 12 July 2011.
- ↑ Coldplay, Robert Plant, Radiohead, Duffy and Adele win at Grammy Awards, Daily Mirror, Retrieved 21 February 2011
- ↑ "Adele: New Record is 'Quite Different'". Spin Magazine. 2 November 2010. 11 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Adele to Release '21' Sophomore Album in February Billboard 2 November 2010". Billboard. 14 September 2009. 8 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "British soul singer Adele preps summer U.S. tour". Los Angeles Times. 8 February 2011. http://latimesblogs.latimes.com/music_blog/2011/02/british-soul-singer-adele-preps-summer-us-tour.html. பார்த்த நாள்: 8 May 2011.
- ↑ "Adele's '21' - Biggest No. 1 Album Since 'Bodyguard'". Billboard. 25 January 2012. http://www.billboard.com/news/adele-s-21-biggest-no-1-album-since-bodyguard-1005977552.story#/news/adele-s-21-biggest-no-1-album-since-bodyguard-1005977552.story. பார்த்த நாள்: 31 January 2012.
- ↑ Adele's "21" breaks records again[தொடர்பிழந்த இணைப்பு] CBS News. Retrieved 31 January 2012
- ↑ Keith Caulfield (9 December 2011). Adele Makes History Billboard. Retrieved 31 January 2011
- ↑ 6 கிராமி விருதுகள் வென்றார் அடெல்! தினமலர், பெப்ரவரி 13, 2012
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அடெல் (பாடகி) |