அடுக்கேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடுக்கேற்றம் (Exponentiation) என்பது ஒரு கணிதச் செய்கை. இதை bn என்று குறிப்பது வழக்கம். இதில், b என்பதை அடி எனவும், nஅடுக்கு அல்லது படி எனவும் அழைப்பர். n நேர் முழு எண்ணாக இருக்கும்போது, அடுக்கேற்றம், bn தடவைகள் தொடர்ச்சியாகப் பெருக்குவதாக இருக்கும்.

அடுக்கு பொதுவாக அடியின் வலப்பக்கத்தில் மேலெழுத்தாகக் குறிக்கப்படும். bn என்னும் அடுக்கேற்றத்தை b இன் n ஆவது அடுக்கு என்றோ, b இன் n ஆம் படி என்றோ வாசிப்பது வழக்கம். சில அடுக்கேற்றங்களைச் சில சமயங்களில் அவற்றுக்கேயுரிய தனியான சொற்களால் குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக b2 என்பதை b இன் வர்க்கம் எனவும், b3 என்பதை b இன் கனம் எனவும் வாசிப்பதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்கேற்றம்&oldid=3089346" இருந்து மீள்விக்கப்பட்டது