செயலியை அமல்படுத்தும் வரிசை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் மற்றும் கணினி நிரலாக்கம் , செயலியை அமல்படுத்தும் வரிசை முறை (Order of operations) என்பது எந்த செயலியை எந்த வரிசையில் அமல்படுத்த வேண்டும் என்பதை விளக்க உதவும் ஒரு விதி ஆகும். உதரணமாக கணிதத்தில் மற்றும் கணினி நிரலாக்கத்தில் , பெருக்கல் செயலி கூட்டல் செயலிக்கு முன் அமல்படுத்தப்படும். 2 + 3 × 4 இதன் விடை 14. இது போன்ற சிக்கலான இடங்களில் அடைப்பு குறியை பயன்படுத்த வேண்டும்.அவை, "( ), { }, மற்றும் [ ]". மேலே குறிப்பிட்ட கணக்கை 2 + (3 × 4) என தெளிவாக குறிப்பிடலாம். இதுவே (2 + 3) × 4 என வரும் போது அதன் விடை 20 என மாறும். நவீன இயற்கணித குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் கூட்டலுக்கு முன்பு பெருக்கல் செயலி அமல்படுத்தப்படும். இதன் காரணமாக 3 + 4 × 5 = 4 × 5 + 3 = 23. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் அடுக்குக்குறி செயலி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அடுக்குக்குறி , கூட்டல் மற்றும் பெருக்கல் செயலியை விட முதலிடத்தை எடுத்துக்கொண்டது. இதன் காரணமாக 3 + 52 = 28 மற்றும் 3 × 52 = 75.அடைப்பு குறிக்குள் வருவதை முதலிலும் அடுக்குக்குறியை அதன் பின்னும் அமல்படுத்த வேண்டும் (3 + 5)2 = 64.