அடா (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடா அல்லது இலை அடா (Ada) [1] ஓர் இந்திய இனிப்பையும் பாரம்பரிய கேரள சுவையையும் கொண்டது. அரிசி மாவுடன் இனிப்புக் கலவைகளைத் திணித்து, வாழை இலையில் வைத்து, வேகவைத்து, செய்யப்பட்ட இனிப்பாகும். இது மாலை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவில் ஒரு பகுதியாகவோ எடுத்துக் கொள்ளப்படுகிறது.  தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இதைக் காண முடியும். இதில் துருவிய தேங்காய், அரிசி மாவு ஆகிய இரண்டும் முக்கிய பொருட்களாகும். இந்தச் சிற்றுண்டி, துருவிய  தேங்காய், அரிசி மாவு, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துச் செய்யப்படுகிறது. இவை பொதுவாக ஓணத்தின் பொழுது தயாரிக்கப்படுகின்றன.[2][3]

பிரசாதத்திற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. தும்பைப் பூவைச் சேர்க்கும் பொழுது இதன் சிறப்புக் கூடுகிறது.[சான்று தேவை] சில நேரங்களில் வெல்லம்-வாழை, தேங்காய் சேர்த்துச் செய்யப்படுகிறது. காரமான மசாலா அடா,  காலை உணவாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் மைதா, அரிசி மாவு போன்றவை முக்கிய பொருட்களாகும். கேரளக் கோயில்களில் பக்தர்களுக்குப் பிரசாதமாக இது வழங்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடா_(உணவு)&oldid=3799720" இருந்து மீள்விக்கப்பட்டது